சிஎஸ்கே ஆர்சிபி போட்டி டிக்கெட் விற்பனை சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட பேடிஎம்.. நடந்தது என்ன.?

0
99
IPL

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 7 போட்டிகளுக்கும் டிக்கெட் கிடைப்பதில் ரசிகர்களுக்கு பெரிய சிரமங்கள் ஏற்பட்டது. டிக்கெட்டை நேரில் வாங்க வந்த ரசிகர்களுக்கு சரியான பாதுகாப்பு மற்றும் குடிநீர், கழிவறை வசதியென எதுவுமே ஏற்படுத்தி தரப்படவில்லை. மேலும் கூட்டம் அதிகமாகி சில தேவையற்ற பிரச்சனைகளும் உருவானது.

கடந்த வருடத்தில் இது மிகவும் பரபரப்பாக சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிக்கெட் விற்பனை விஷயத்தில் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டு ரசிகர்களுக்கு பெரிய தொந்தரவை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ரசிகர்களுக்கு டிக்கெட்டை நேரில் வரவைத்து விற்பனை செய்யாமல், மொத்தமாக எல்லா டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்வது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் மூலமாக நேரில் வந்து டிக்கெட்டை பெறுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முடியும் என கூறப்பட்டிருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று மார்ச் 18ஆம் தேதி காலை 9:30 மணி முதல்துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் என்ன நடந்தது?

இப்படியான நிலையில் இன்று பெரும்பான்மையான ரசிகர்களால் டிக்கெட்டை வாங்க முடியாமல் போனது. அத்தனை டிக்கெட்டுகளும் சிறிது நேரத்தில் விற்று தீர்ந்ததாக கூறப்பட்டது. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் இது மிகப்பெரிய மோசடி என சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு சிஎஸ்கே போட்டிக்கும் டிக்கெட் விற்பனை என்பது சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் டிக்கெட் விற்கும் ஆன்லைன் தளமான பேடிஎம் இன்சைடர் இந்த பிரச்சனை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான டாட்டா ஐபிஎல் 2024 முதல் போட்டிக்கு அமோக வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. துரதிஷ்டவசமாக எதிர்பாராமல் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் உங்களை சிரமப்படுத்தி இருக்கும்.

இதையும் படிங்க : சிஎஸ்கே-ல அம்பதி ராயுடு கான்வே இடத்துக்கு.. இந்த 2 பசங்கள நானே உருவாக்க போறேன் – மைக் ஹஸி பேட்டி

உங்களுக்கு ஏற்பட்ட இப்படியான மோசமான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். நம்பிக்கையான மற்றும் எந்த தடைகளும் இல்லாத அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதே எங்களுடைய நோக்கம். நாங்கள் இதை உறுதி செய்ய கடமைப்பட்டு இருக்கிறோம். நாங்கள்விரைவில் சரியாக செயல்படுவோம். அப்டேட்டுகளுக்காக காத்திருங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.