சிஎஸ்கே முதலிடத்துக்கு முன்னேற்றம்.. மும்பை 2வது இடத்துக்கு சரிவு.. ரோகித் கேப்டன்ஷியில் கை வைத்ததால் வந்த பிரச்சனை!

0
1045
CSK

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013 ஆம் ஆண்டு முதல், இந்த ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்தார்.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை அதிரடியாக டிரேடிங் செய்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வந்தார்கள். அந்த நேரத்திலேயே அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று பேசப்பட்டது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா என்பது முடிவான விஷயமாக இருந்தாலும் கூட, ரோகித் சர்மாவுக்கு உரிய மரியாதை கொடுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிரடியாக ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்து ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர கொடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணியின் ரசிகர்களை மிகப்பெரிய கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியாவை விமர்சனத்திற்கு உள்ளான முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வந்ததை அந்த அணியின் ரசிகர்கள் விரும்பவில்லை.

இந்த நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பின் தொடர்வதில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இது நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த காரணத்தினால் தற்பொழுது சமூக வலைதளத்தில் அதிக பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் அணியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

மும்பை இந்தியன் அணி அவசரப்பட்டு எடுத்த ஒரு முடிவின் காரணமாக, ரசிகர்கள் மத்தியில் அந்த அணிக்கு பெரிய அதிருப்தி உருவாகி இருக்கிறது. மேலும் அது சமூக வலைதள பக்கங்களில் பின் தொடர்வதில் எதிரொலித்து இருக்கிறது. நாளை இது சந்தை மதிப்பிலும் கூட பிரச்சினையை கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது!