சிஎஸ்கே மும்பைக்கு.. அடுத்த வருஷம் ஆர்சிபி வேற லெவல்ல இருக்கும்.. ஆன்ட்டி பிளவர் விடமாட்டார் – மைக்கேல் வாகன் கருத்து

0
479
Vaughan

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஆன்டி பிளவர், இந்த ஆண்டு ஆர் சி பி அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்து அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்று வெளியேறியது. இந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆர்சிபி அணியை ஆன்டி பிளவர் சிறப்பான முறைக்கு கொண்டு வருவார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

ஆன்டி பிளவர் பயிற்சியாளராக சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார். மேலும் டி20 லீக்குகளுக்கும் பயிற்சியாளராக இருந்து வந்திருக்கிறார். நல்ல அணியை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் அவர் மிகவும் கெட்டிக்காரர் என்ற பெயர் வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு மைதானத்திற்கு ஏற்ற வகையில் ஒரு அணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அவருக்கு மிகவும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக கிடைத்த அணியை கொண்டு அதிலிருந்து ஒரு சிறந்த பிளேயிங் லெவனை கண்டுபிடிப்பதும் அவருக்கு சிரமமாக இருந்தது.

இந்த நிலையில் முதல் எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளை ஆர்சிபி அணி தோற்ற பிறகு, தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் ஒரு நல்ல பிளேயிங் லெவனை கண்டுபிடித்தார். அந்த அணி தொடர்ந்து ஆறு போட்டிகளைப் பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியது.

தற்பொழுது ஆன்டி பிளவர் பற்றி பேசி இருக்கும் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “ஆன்டி பிளவர் மற்றும் அவருடைய அணியினர் செயல்படும் விதம் குறித்து எனக்கு நன்றாக தெரியும். மேலும் அவர் தன்னுடைய அணியில் உள்ள ஒவ்வொருவரை பற்றியும் சிறந்த ஆராய்ச்சியை செய்திருப்பார். இதனால் யாரை தற்பொழுது வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாக தெரியும். அதுகுறித்த நல்ல யோசனை இருக்கும். சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான ஒரு சிறந்த அணியை ஏலத்தில் அவர் உருவாக்குவார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு ஆர்சிபி பண்ணினதுக்கு.. அஸ்வின் பதிலடி கொடுத்தார்.. வாய மூடிட்டு இருங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்

ஆர்சிபி அணிக்கு ஹோம் மேம்களை வெல்லும் டிஎன்ஏ இல்லை. நீங்கள் உங்களுடைய ஹோம் கேம்களில் 80 சதவீதத்தை வென்றால் நீங்கள் பிளே ஆப் சுற்றில் நான்கு அணிகளில் ஒரு அணியாக இருப்பீர்கள். இதன் காரணமாக ஆன்டி பிளவர் சொந்த மைதானத்தில் சரியாக விளையாடக்கூடிய ஒரு அணியை உருவாக்க விரும்புவார்” என்று கூறியிருக்கிறார்.