ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணியில் இம்பேக்ட் பிளேயராக ஆட வாய்ப்புள்ள 4 வீரர்கள்

0
304

ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களில் இருக்கும் நிலையில், கிரிக்கெட் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணி தனது முதல் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தைப் பாதுகாக்கும் பெரிய பொறுப்பும் உள்ளது.

இதனாலேயே எம் எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சில நட்சத்திர வீரர்களைத் தக்க வைத்துக்கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் திறமையான வீரர்களுக்கு அதிக பணம் செலவழித்தும் வீரர்களை வாங்கியது. எடுத்துக்காட்டாக நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் டைரி மிச்சல் 14 கோடிக்கும், இந்திய அணியில் அறிமுகமே ஆகாத இளம் நட்சத்திரம் சமீர் ரிஸ்விக்கு 8 கோடியும் செலவழித்துள்ளனர்.

- Advertisement -

கொல்கத்தா அணியில் இருந்து விடுவித்த லார்டட் சர்துல் தாக்கூரையும் தற்போது சென்னை அணியே வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் என்னும் விதி கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படையில் சற்று மாற்றியமைத்தது என்றும் சொல்லலாம். அதாவது பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு வீரர், அணிக்குத் தேவையான சூழலில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களிப்பினை அளிப்பதையே இம்பாக்ட் பிளேயர் விதி கூறுகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிளேயிங் லெவலில் ஆடும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் இந்த நான்கு வீரர்கள் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களைப் பற்றி காண்போம்.

இம்பேக்ட் பிளேயர்

துஷார் தேஷ்பாண்டே: இந்திய இளம் வேக பந்துவீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே கடந்த சீசனில் சென்னை அணிக்காக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த இம்பேக்ட் பிளேயர் விதிக்கு இவர் சிறந்த தேர்வாக இருக்கலாம். இதுவரை 23 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரது இளம் வேகம் விக்கட்டுகளை எடுக்க அணிக்குக் கை கொடுக்கும்.

- Advertisement -

அஜிங்கியா ரகானே: கடந்த சீசனில் சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்ததால், தனது சிறந்த பேட்டிங் பார்மை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார். அதனாலேயே இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சமீபத்தில் ரஞ்சிப் போட்டிகளில் இவரது ஃபார்ம் குறிப்பிடும்படியாக இல்லை எட்டு லிஸ்ட் ஏ போட்டிகளில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரை இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

சமீர் ரிஸ்வி: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான இவர் சென்னை அணியால் 8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்திய அணியில் அறிமுகமாகாத அதிக விலைக்கு ஏலம் போன வீரர் தற்போது இவர் மட்டுமே. இவரது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் இவரது பந்து வீச்சு அணிக்கு எந்த நேரத்திலும் கை கொடுக்கும் என்பதால் இம்பேக்ட் பிளேயர் ரோல் இவருக்கு சரியானதாக இருக்கலாம்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: விலகிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்கள்.. முழு பட்டியல்

முகேஷ் சவுத்ரி: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான வலது கை வேகப்பந்து பேச்சாளரான இவர், ஸ்விங் பந்துகளை அற்புதமாக வீசக்கூடியவர். 2022 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு அறிமுகமாகி சிறப்பாக பந்து வீசினார். மும்பை அணிக்கு எதிராக இவர் வீழ்த்திய இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மாவின் விக்கெட் இன்றளவும் பேசப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். தற்போது தேடியிருக்கும் இவர் இந்த விதிக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.