சி எஸ் கே வீரர்களுக்கு விசா பிரச்சினையா? இங்கிலாந்து வீரர்கள் நிலை என்ன?

0
468

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடைபெற உள்ளதால் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளும் விதமாக பல நாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடிவெடுத்துள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் பென் ஸ்டோக்ஸ் கூட இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்து வீரர் மோயின் அலிக்கு விசா பிரச்சனை ஏற்பட்டது .மோயின் அலிக்கு அளித்து விசா கிடைக்காததால் அவர் தாமதமாக தான் இந்தியா வந்தார்.

இதனால் சி எஸ் கேவின் முதல் டி20 போட்டியில் கடந்த ஆண்டு மோயின் அலி விளையாட வில்லை. இந்த நிலையில் நடப்பாண்டிலும் இங்கிலாந்து வீரர்களுக்கு விசா சிக்கல் இருக்குமா என ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற தவறை பார்த்து சரி செய்து கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளிநாட்டு வீரர்களுக்கான விசாவை பெற முன்பே நடவடிக்கை எடுத்தது.

- Advertisement -

இதன் காரணமாக மோயின் அலிக்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பே விசா கிடைத்துவிட்டது. இதேபோன்று அதிரடி ஆல்ரவுண்டர் விசா கிடைத்து விட்டது. இதனை அடுத்து இருவரும் இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வர உள்ளனர். இதனை தங்களது சமூக வலைத்தளத்தில் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதனால் ஒட்டுமொத்த வீரர்களும் முதல் போட்டியில் விளையாட தயாராக இருப்பார்கள். இலங்கை வீரர் தீக்சனா மட்டும் இன்னும் ஒரு, இரு நாளில் இந்தியா திரும்புவார். இதேபோன்று இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஜடேஜாவும் தற்போது சென்னைக்கு திரும்பி உள்ளார். சென்னையில் ஒரு நாள் போட்டி நடைபெற்றதால் இரண்டு நாட்கள் சிஎஸ்கே வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இதனை பயன்படுத்திக் கொண்டு கேப்டன் தோனி , ராணுவ பயிற்சிக்கு இரண்டு நாள் சென்று திரும்பி உள்ளார். இதனிடையே கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லோகி பெகுர்சன் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -