ஆர்சிபி மும்பை ஆடிய அதே பிட்ச்.. ரோகித் சர்மாவுக்கு நான் இப்படித்தான் பிளான் பண்ணேன் – சர்துல் தாக்கூர் பேட்டி

0
1100

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு சென்னை அணி வீரர் சர்துல் தாக்கூர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய சிவம் டுபே அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இறுதியாக களமிறங்கிய மகேந்திர சிங் தோனி நான்கு பந்துகளில் மூன்று ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி 20 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றியை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாகவே அமைந்தாலும், பின்னர் ஆட்டத்தின் மிடில் பகுதியில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை அணியால் ரன்களைக் குவிக்க முடியவில்லை.

ரோஹித் சர்மா மட்டுமே ஒரு முனையில் நின்று போராட, மறுமுனையில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களான சர்துல் தாக்கூர் மற்றும் துஷார்தேஸ் பாண்டே ஆகியோர் முக்கியமான இறுதி கட்டத்தில் அற்புதமாக பந்து வீசினார்கள். இதனால் மும்பை அணியாள் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

சர்துல் தாக்கூர் பேட்டி

சென்னை அணியின் வெற்றிக்கு பின்னர் பேசிய சர்துல் தாக்கூர் “இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதானது அல்ல. சென்னை மற்றும் மும்பை அணிகளின் போட்டி எப்போதுமே தரமான விளையாட்டுக்கு பெயர் பெற்றது. ரோகித் சர்மா, ருத்ராஜ் மற்றும் சிவம் துபே ஆகியோர் நன்றாக விளையாடினார்கள். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியில் வெற்றி பெற்றோம்.

- Advertisement -

நாங்கள் எந்த திசையில் பந்து வீச முயற்சித்தாலும் அந்த இடத்தில் ஃபீல்டர்களை நிற்க வைப்பது குறித்து பேசினோம். நாங்கள் பந்து வீசும் போது ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதாக இருந்தது. ஏப்ரல் 11ம் தேதி இதே மைதானத்தில்தான் பெங்களூர், மும்பை அணிகள் மோதின. பொதுவாக முதலில் பேட்டிங் செய்து முடித்த பின்னர் இரண்டாவதாக பேட்டிங் செய்ய வரும் அணிக்கு ஆடுகளம் சற்று மெதுவானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பத்திரானாவை தவிர மற்றவர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று உணர்ந்தோம்.

இதையும் படிங்க: நாங்க ஜெயிச்சிருப்போம்.. ஆனா ஸ்டெம்புக்கு பின்னாடி இருந்தது தோனி.. அதான் தோத்தோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

பதிரானாவின் யாக்கர்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. வாங்கடேவில் இப்படி பந்து வீசுவது மிகவும் கடினம். ரோகித் சர்மா நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டம் கொஞ்சம் சறுக்குவதை உணர்ந்தோம். எனவே தைரியமாக அவரை பவுண்டரி லைனின் பெரிய பக்கத்திற்கு அடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு எல்லையில் பௌண்டரி அடித்து முழு மதிப்பெண்களை பெறும் அவர், அடிக்கத் தவறினால் ஆட்டத்தை மாற்றலாம் என்று சர்துல் தாக்கூர் கூறி இருக்கிறார்.