“இந்த ஒரு விஷயத்தை மட்டும் சிஎஸ்கே எப்போதும் செய்யாது அதனால் தான் சிஎஸ்கே கெத்து” – ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உற்சாக பேட்டி!

0
188

பதினாறாவது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது 40 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 41 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது .

கடந்த வாரம் புள்ளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தற்போது நான்காவது இடத்திற்கு பின்தங்கி இருக்கிறது . இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும் .

- Advertisement -

கடந்த வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் சிஎஸ்கே அணியினர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் . டோனி இந்த ஐபிஎல் உடன் ஓய்வு பெறுவார் என்று ஒரு கருத்து நிலவி வருவதால் அவரை வெற்றியுடன் வலியனுப்ப சிஎஸ்கே வீரர்கள் தங்களுடைய அர்பணிப்பை கொடுத்து விளையாடி வருகின்றனர் .

2012 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக தொடர்ச்சியாக ஆடி வருபவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா . சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இவர் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக திறமையான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார் . தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியிலும் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகியவற்றின் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்பவர் .

இதுவரை 218 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரவீந்திர ஜடேஜா 2582 ரன்களையும் 143 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் . கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . இவரது தலைமையின் கீழ் தொடர்ச்சியான தோல்விகளை பெற்றதால் தொடரின் மத்தியில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் மகேந்திர சிங் டோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார் . இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இவருக்கும் மோதல் இருப்பதாக ஒரு கருத்து நிலவியது . அதெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் படையுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா .

- Advertisement -

இந்நிலையில் மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணி சிறப்பானது ஏன் என தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ரவீந்திர ஜடேஜா . அந்தப் பேட்டியில் கூறியிருக்கும் அவர் ” சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்போதுமே வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்ததில்லை என தெரிவித்துள்ளார் . அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஊக்கமும் ஆதரவும் தருவார்கள் ஆனால் அவர்கள் ஒருபோதும் அழுத்தத்தை கொடுத்ததில்லை என தெரிவித்திருக்கிறார் .

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய ரவீந்திர ஜடேஜா ” அந்த அணி நிர்வாகம் எந்த ஒரு வீரரையும் மனதளவில் மிகவும் தாழ்வாக யோசிக்க வைத்ததில்லை என தெரிவித்துள்ளார் . மேலும் அணியில் மூத்தவிரர்கள் இளம் வீரர்கள் என்ற பாகுபாடு எல்லாம் ஒருபோதும் பார்க்கப்படாது எனவும் கூறியிருக்கிறார் . இது போன்ற காரணங்களால் தான் சிஎஸ்கே அணி மற்ற அணியை விட சிறப்பாக செயல்படுகிறது எனவும் இதுதான் சிஎஸ்கே அணியின் சிறப்பு எனவும் தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா .