“பென் ஸ்டோக்சின்16 கோடி சம்பளத்தில் கைவைத்த சிஎஸ்கே” … எவ்வளவு தெரியுமா?.. காரணம் இதுதான்!

0
30217

மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நாளை நடைமுறை இருக்கும் போட்டியில் குஜராத் அணியுடன் மோத இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 14 சீசன் களில் பங்கேற்றுள்ள சிஎஸ்கே பத்தாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தங்களது சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது .

- Advertisement -

முதலாவது தகுதி சுற்றுப்போட்டியில் குஜராத் அணியை வென்ற சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . கடந்த முறை படுதோல்வி அடைந்து வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு அனுபவம் மிக்க வீரர்கள் மற்றும் கேப்டனின் எழுச்சியால் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது .

இறுதிப் போட்டியில் ஆடை இருக்கும் சிஎஸ்கே அணியில் மூத்த வீரரான இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்பட்ட பிட்னஸ் பிரச்சனை மற்றும் முழங்கால் காயம் காரணமாக சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கு பெற்றார் மேலும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பிளே ஆப் சுற்று ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றார் பென் ஸ்டோக்ஸ். இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் அவரது சம்பளத்தை குறைப்பதற்கு முடிவு செய்து இருக்கிறது . கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு பென் ஸ்டோக்சை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் அவரது சம்பளத்திலிருந்து 20% குறைப்பு செய்ய முடிவு செய்திருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம் . மேலும் இந்த சம்பள குறைப்பு ஐபிஎல் ஒப்பந்தத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 14 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே பென் ஸ்டோக்ஸ் விளையாடி இருப்பதால் அவருக்கு ஒரு போட்டிக்கு சராசரியாக 23.20 லட்ச ரூபாய் குறைக்க முடிவு செய்து இருக்கிறது சென்னை அணியின் நிர்வாகம் . இதனால் அவரது மொத்த சம்பளத்தில் 2.78 கோடி ரூபாய் இந்த வருடம் குறைக்கப்படும்.

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சம்பள குறைப்பிற்கு ஆளாவது பென் ஸ்டோக்ஸ் மட்டுமல்ல . அவரது சக நாட்டு வீரரான மார்க் வுட் லக்னோ அணிக்காக ஆடி வந்தார் . அவரும் காயம் காரணமாக முதல் ஐந்து போட்டிகளில் மட்டுமே பங்கு பெற்ற நிலையில் அணியில் இருந்து விலகினார் . மேலும் தனது குழந்தை பிறந்ததற்காக இங்கிலாந்துக்கு திரும்பியதும் குறிப்பிடத்தக்கது . அவரது சம்பளத்திலிருந்தும் 20% பிடிக்க லக்னோ நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது . டிசம்பரில் நடைபெற்ற மினி ஏலத்தில் 7:5 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -