2025 ஐபிஎல்.. டெல்லி லீக்கின் சாதனை.. சிஎஸ்கே கையில் இருக்கும் வெண்ணை.. தோனி மனது வைப்பாரா?

0
230
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மாநில டி20 லீக்கில் இருந்து வந்த வீரர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கும் அப்படி ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை தோனி பயன்படுத்திக் கொள்வாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு நல்ல விதமாக செல்லவில்லை. அவர்கள் அணியில் நல்ல ஹிட்டர்கள் இல்லை. மேலும் அவர்கள் வாங்கி இருக்கும் இந்திய சீனியர் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மிலும் டச்சிலும் இல்லை. இதுவெல்லாம் சேர்ந்து சிஎஸ்கே அணியை புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளி இருக்கிறது.

- Advertisement -

டெல்லி பிரிமியர் லீக்கின் சாதனை

இந்தியாவில் நடைபெறும் மாநில டி20 லீக்குகளில் மிகப் பெரிய லீக் ஆக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு துவங்கிய டெல்லி பிரிமியர் லீக் ஒரே வருடத்தில் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

டெல்லி பிரிமியர் லீக்கில் இருந்து பஞ்சாப் அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா, லக்னோ அணிக்கு திக்வேஷ் ரத்தி, டெல்லி அணிக்கு விப்ராஜ் நிகம் என அசத்தலான வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக டெல்லி பிரிமியர் லீக்கின் மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே கையில் இருக்கும் வெண்ணை

இந்த நிலையில் டெல்லி பிரிமியர் லீக்கில் நல்ல முறையில் விளையாடி இருக்கும் வன்ஸ் பேடி சிஎஸ்கே அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து வந்து முதல் வாய்ப்பை பெற்ற எல்லா வீரர்களும் சாதித்து வருகின்ற பொழுது, இவரும் மிடில் வரிசையில் அதிரடியாக விளையாடி சாதிப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அவர் டெல்லி பிரிமியர் லீக்கில் பேட்டிங் செய்த விதமும் அப்படித்தான் இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் அடுத்த 4 போட்டிகள்.. 3 அணிகள்.. சிஎஸ்கே செய்ய வேண்டிய காரியம்.. இது நடந்தா நல்லது

இந்த நிலையில் சிஎஸ்கே அணி மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. இந்தப் போட்டியில் ராகுல் திரிபாதியை வெளியேற்றிவிட்டு வன்ஸ் பேடியை உள்ளே கொண்டு வர வேண்டும் என இப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு தோனிதான் மனது வைக்க வேண்டும். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -