பெண்கள் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ! சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கருத்து

0
187
CSK

உலகளவில் உரிமையாளர் அணிகளைக் கொண்டு நடத்தப்படும் டி20 தொடர்களில், அதிகளவு இரசிகர்களையும், வருமானத்தையும் கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர்தான். தற்போது விற்கப்பட்ட ஒளிபரப்பு உரிமத்திலும், உலகின் இரண்டாவது பெரிய விலைக்கு விற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

இப்படி உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐ.பி.எல் தொடரில் அதிகளவு இரசிகர்களையும் வருமானத்தையும் கொண்ட வெற்றிக்கரமான அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இன்டியன்ஸ் அணியும்தான்.

- Advertisement -

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்றுள்ள 15 ஐ.பி.எல் சீசன்களில் இரண்டு முறை மட்டுமே ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையாது வெளியேறி இருக்கிறது. அதுவும் இந்த ஆண்டும், இதற்கு முந்தைய ஆண்டும்தான் இப்படி நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்னால் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்து அசத்தி இருக்கிறது. அதிகமுறை ப்ளேஆப்ஸ் சுற்றிலும், இறுதிபோட்டியிலும் பங்குபெற்ற அணியாக இருப்பதோடு, நான்கு முறை ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த ஆண்டு மெகா ஏலத்தோடு நடைபெற்ற ஐ.பி.எல் சீசன்தான் சென்னை அணிக்கு இதுவரையில் மிக மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறது. மொத்தம் 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று, மும்பை இன்டியன்ஸ் அணிக்கு அடுத்து இரண்டாவது அணியாக ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் சில முக்கியமான விசயங்களைப் பகிர்ந்திருக்கிறார். பி.சி.சி.ஐ பெண்கள் ஐ.பி.எல் தொடரை நடத்துவதாக இருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் ஒரு அணியாக இருக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், முன்னாள் உள்நாட்டு சிறந்த கிரிக்கெட் வீரர்கள் சி.எஸ்.கே அணியின் இளந்திறமைகள் கண்டறியும் குழுவில் உள்ளதாகவும், அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை நெருக்கமாகப் பார்த்து வருவதாகவும், வேகமாக வீசக்கூடிய ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரை விரும்புவதாகவும், கே.எம்.ஆசிப்பை இதற்காகப் பயன்படுத்தவும் முடியும் என்று தெரிவித்தார். அடுத்து டி.என்.பி.எல் தொடரிலிருந்து 14 வீரர்கள் ஐ.பி.எல் தொடருக்குச் சென்றுள்ளதைக் குறிப்பிட்டு, இந்தத் தொடர் இளம் தமிழக வீரர்களுக்குப் பெரிய அடித்தளமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்!