ஆர்சிபி வெற்றி.. நக்கல் செய்த ராஜஸ்தான்.. ஆனால் சிஎஸ்கே காட்டிய பெருந்தன்மை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
630
csk and rcb

ஐபிஎல் தொடரில் ஆண்கள் ஆர்சிபி அணி 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடமும், 2011ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு இருக்கிறார்கள்.

மேலும் இது இல்லாமல் ப்ளே-ஆப் சுற்றுக்கு சில முறைகளில் வந்திருக்கிறார்கள். கோப்பையை வெல்லவில்லை என்றாலும் கூட, ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை எடுத்து பார்க்கும் பொழுது, அந்த அணி அவ்வளவு மோசமாக விளையாடவில்லை என்பது தெரியும்.

- Advertisement -

ஆனாலும் ஆர்சிபி அணி குறித்து இணையத்தில் எப்பொழுதும் கேலியும் கிண்டலும் மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால் அந்த அணி நிர்வாகம் வீரர்களை தக்க வைப்பது மற்றும் வாங்குவதில் நிறைய குளறுபடிகளை செய்யும். இதன் காரணமாகவே அந்த அணிக்கு நிறைய நெருக்கடிகள் உண்டாகும்.

மேலும் ஆர்சிபி அணியில் ரன் மிஷின் விராட் கோலி ஏபி.டிவில்லியர்ஸ், கெயில், வாட்சன் மற்றும் கேஎல்.ராகுல் போன்ற வீரர்கள் விளையாடியிருந்தாலும் கூட, அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாதது பெரிய வருத்தமாக அந்த அணி ரசிகர்கள் மற்றும் அந்த அணியின் நிரந்தர வீரர்களுக்கு இருந்து வந்தது.

சிஎஸ்கே செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

இந்த நிலையில் தான் ஆர்சிபி அணி பெண்கள் டி20 கிரிக்கெட் லீக்கில் இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆர்சிபி அணி டி20 லீக்கில் வாங்கிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பதினாறு ஆண்டுகள் காத்திருந்து வந்த சாம்பியன் பட்டம் என்பதால், ஒட்டுமொத்த ஆர்சிபி முகாமும் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்சிபி பெண்கள் அணியின் இந்த வெற்றிக்கு தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் “உங்களின் இந்தச் சிறப்பான செயல்பாட்டால் எங்கள் அனைவரது இதயங்களையும் வென்று விட்டீர்கள்” என வாழ்த்தி இருக்கிறது. ஆர்சிபி ரசிகர்கள் இதை மிகவும் நெகிழ்ச்சியோடு வரவேற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : விராட் கோலி வீடியோ-காலில் வந்து சொன்னது என்ன? – ஸ்மிருதி மந்தனா சுவாரசிய பதில்

அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், ஒரு ஆண் ஒரு சிலிண்டரை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, அப்பொழுது ஒரு பெண் அதை வெகு சாதாரணமாக தூக்கிக் கொண்டு செல்வது போல மீம் போட்டு, ஆண்கள் ஆர்சிபி அணியை கேலி செய்து இருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பெருந்தன்மையோடும் நாகரிகமாகவும் நடந்து கொண்டிருக்கின்ற பொழுது, ராஜஸ்தான் ராயல்ஸ் செய்த காரியம், ஆர்சிபி ரசிகர்களை மிகவும் கோபம் அடைய வைத்திருக்கிறது.