விராட் கோலி வீடியோ-காலில் வந்து சொன்னது என்ன? – ஸ்மிருதி மந்தனா சுவாரசிய பதில்

0
411
Virat

டபிள்யுபிஎல் தொடரின் இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. 16 ஆண்டுகளாக விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை எந்த ஒரு பட்டத்தையும் வென்றதில்லை என்பதால், அந்த அணி குறித்தான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது.

மேலும் நேற்று போட்டி நடந்த அருண் ஜெட்லி மைதானத்திற்கு 30 ஆயிரம் ரசிகர்கள் நேரில் வந்திருந்தார்கள். இதில் டெல்லி மற்றும் பெங்களூருக்கு சரிசம ஆதரவு மைதானத்தில் இருந்தது. டாஸ் நிகழ்வுக்கு இரண்டு கேப்டன்களும் வரும்பொழுதே ரசிகர்களின் ஆரவாரத்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட புரியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக செபாலி வர்மா பேட்டிங்கில் முன்னேறி 64 ரன்கள் விக்கெட் இல்லாமல் எடுத்தது. ஆனால் மேற்கொண்டு 14 ஓவர்களில் 49 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மோலினக்ஸ் 3 மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து தொடர்ந்து விளையாடிய ஆர் சி பி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31, சோபி டிவைன் 32 எல்லீஸ் பெரி 34, ரிச்சா கோஸ் 13 என ரன்கள் எடுக்க, போட்டி கடைசி ஓவருக்கு சென்றாலும் கூட மூன்று பந்துகள் மீதம் வைத்து, எந்த இடத்திலும் நெருக்கடி உண்டாகாத வகையில் விளையாடிய, முழு ஆட்டத்தையும் கண்ட்ரோலில் வைத்து ஆர்சிபி அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

16 ஆண்டு கனவு நனவான தருணம்

பல ஆண்டுகளாக காத்திருந்த வெற்றி என்கின்ற காரணத்தினால், பெங்களூர் தெருக்களில் ரசிகர்கள் கூட்டமாக சேர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகின்ற வீடியோக்கள் உடனே சமூக வலைதளத்தில் வெளியாகின. அந்த அளவிற்கு இந்த வெற்றி ஆர்சிபி ரசிகர்களுக்குமுக்கியமாக இருந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் ஆண்கள் ஆர்சிபி அணியின் வீரர்களும் இந்த வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி நேற்று ஆட்டம் முடிந்த அடுத்த நொடி வீடியோ அழைப்பில் வந்து ஆர்சிபி பெண்கள் அணியினருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறினார்.

இதையும் படிங்க : ஆர்சிபி ரசிகர்களை பார்த்துதான் பயம்.. ரொம்ப ஓவரா பண்ணிட்டேன்.. ஆவேஷ் கான் பேட்டி

இதுகுறித்து ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசும்பொழுது “விராட் கோலி பைய்யா பேசுவதை சரியாக கேட்க முடியவில்லை. ஏனென்றால் கூட்டம் அவ்வளவு சத்தமாக இருந்தது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். 16 17 ஆண்டுகளாக இந்த அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதன் காரணத்தால் அந்த மகிழ்ச்சியை அவரது முகத்தில் என்னால் பார்க்க முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.