210 ரன் உங்களுக்கு தான் பெருசு.. எங்களுக்கு இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான் – பிளமிங் பேட்டி

0
993
Fleming

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி லக்னா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. நேற்று 200 ரன்கள் தாண்டி சிஎஸ்கே குவித்த காரணத்தினால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருப்பதால் அது குறித்தான காரணங்களை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். உடன் விளையாடிய சிவம் துபே வெறும் 27 பந்தில் 66 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்கள் என்கின்ற பெரிய ஸ்கோரை அடித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக கொடுத்துவிட்டது. இதனால் சிஎஸ்கே அணி வெகு எளிதாக வெற்றி பெறும் என்று மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரத்தோடு இருந்தார்கள். ஆனால் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து தனி ஒருவராக சிஎஸ்கே அணியை வீழ்த்தி லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசும்பொழுது ” இன்று முதல் 25 ஓவர்களில் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அதன் பிறகு நன்கு வேகமாக மாறிவிட்டது. ஆனால் இது நடக்கும் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனவே நாங்கள் ஒரு நல்ல ஸ்கோர் எடுக்க விரும்பினோம்.

நாங்கள் அவ்வாறு செய்தோம். ருதுராஜின் சிறப்பான சதம், அவர் அடித்த ஷாட்கள் கிராஃப்ட் போல இருந்தது. அது ஒரு அற்புதமான நாக். அவர் நன்றாக விளையாடிய 210 ரன்கள் எடுக்க வைத்தார். ஆனால் அந்த ஸ்கோர் எங்களுக்கு போதுமானதாக இல்லை. இருந்தாலும்கூட நாங்கள் போட்டியில் இருப்பதாக நினைத்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க: அகர்கர் அண்ணா.. தயவுசெய்து டி20 உலக கோப்பைக்கு இந்த சிஎஸ்கே வீரரை எடுங்க – ரெய்னா கோரிக்கை

ஸ்டோய்னிஸ் அவர்கள் தரப்புக்கு சதம் அடித்தார். இது ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் ஆடுகளம் மற்றும் கண்டிஷன் அடிப்படையில் நன்றாகவே போட்டியிட்டோம். ஆனால் நாங்கள் அழுத்தமான சூழ்நிலையில் போட்டியை கொஞ்சம் நழுவ விட்டோம். நாங்கள் எங்களுக்கு பேட்டிங்கில் ஒரு நல்ல காம்பினேஷனை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அது உடனடியாக கிடையாது. நிரந்தர தீர்வாக அதை கண்டுபிடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.