தகப்பன் பிள்ளைகளை கட்டி அணைப்பது போல.. பிராவோவின் உணர்வுபூர்வமான மெசேஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
473
Bravo

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என ஒரு அணியாக இணைந்து அற்புதமான வெற்றியை பெற்று இருக்கிறார்கள். இதில் பந்துவீச்சாளர்கள் குறித்து பயிற்சியாளர் டிவைன் பிராவோ நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை வைத்து இருக்கிறார்.

நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ், சிவம் துபே கடைசியில் தோனி என மூன்று பேரும் மிகச் சிறப்பான பங்களிப்பை பேட்டிங்கில் கொடுத்தார்கள். சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவை எச்சரிக்கையாக ஆடி சிஎஸ்கே தப்பித்தது.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு ஏழு ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்து சிறப்பான முறையில் முன்னேறியது. பத்திரனா தன்னுடைய முதல் இரண்டு ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டை கைப்பற்றியது சிஎஸ்கே அணிக்கு ஆட்டத்தில் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதேசமயத்தில் கடைசி கட்ட ஓவர்களில் ரன் அழுத்தத்தை அதிகரித்ததில் சர்துல் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் மிகச் சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார்கள். 15ஆவது ஓவரை வீசிய சர்துல் தாக்கூர் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். 16வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே மூன்று ரன்கள் மட்டும் கொடுத்து ஹர்திக் பாண்டியா விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி நான்கு ஓவர்களுக்கு அடிக்க வேண்டிய ரன் விகிதம் அதிகரித்தது.

மேலும் நேற்று திடீரென மெதுவான பந்துகளை வீசும் திட்டம் சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர்களிடம் காணப்பட்டது. களத்திற்கு வெளியே இருந்து இந்த யோசனைகளை உள்ளுக்குள் அனுப்பி சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் பிராவோ செயல்படுத்திக் கொண்டிருந்தார்.அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த நிலையில் முக்கியமான இரண்டு ஓவர்களை வீசிய சர்துல் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவர் குறித்தும் அவர் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் 6 வாரத்துல இந்தியாவுக்காக விளையாட போறாரு.. இப்படி மோசமா பேசாதிங்க – பொல்லார்டு வேதனை

பிராவோ பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் “துஷார் மற்றும் சர்துல் உங்கள் இருவரது வளர்ச்சியையும் தந்தை போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதில் பெருமை அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தற்பொழுது சிஎஸ்கே ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது.