4 விக்கெட் 10 பந்து.. சிஎஸ்கே வரலாற்றில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 2வது வீரராக சாதனை

0
243
CSK

2024 ஆம் ஆண்டு 17 ஆவது ஐபிஎல் சீசன் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆர் சி பி அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 23 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 35 ரன்கள் எடுத்து அதிரடி துவக்கம் தந்தார்.

- Advertisement -

இந்த நேரத்தில் நான்காவது ஓவருக்கு சிஎஸ்கே புது கேப்டன் ருத்ராஜ் சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக விளையாடும் பங்களாதேஷின் முஸ்காபிசுர் ரஹமானை கொண்டு வந்தார். அவர் அவர் தொடர்ச்சியாக பாப் டு பிளிசிஸ் 35, ரஜத் பட்டிதார் 0, விராட் கோலி 21, கேமரூன் கிரீன் 18 ரன்கள் என வரிசையாக வெளியேற்றினார். கிளன் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் தீபக் சகர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுச்ராவத் இருவரும் சேர்ந்து சரிவில் இருந்த ஆர்சிபி அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க ஆரம்பித்தார்கள். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 15 ஓவர்களில் 100 ரண்களை எட்டியது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி அணியை 173 ரன்களுக்கு கொண்டு வந்தது. அனுஜ் ராவத் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழக்காமல் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 38 ரங்கல் எடுத்தார்.

- Advertisement -

சிஎஸ்கே வரலாற்றில் தனிச்சாதனை

சிஎஸ்கே அணியின் தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். அடுத்து தீபக் சகர் நான்கு ஓவர்களுக்கு 37 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகள் கைப்பற்றியதால் ஆர்சிபி அணியை கட்டுப்படுத்த முடிந்தது.

சிஎஸ்கே அணிக்காக அறிமுக போட்டியில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றியதின் மூலம் முஸ்தபிசுர் ரஹ்மான், சிஎஸ்கே அணிக்காக அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிராக அறிமுகமான சதாப் ஜகாதி 24 ரன்களுக்கு நான்கு விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணிக்காக 4 வீரர்கள் அறிமுகம்.. ஆர்சிபி ஆச்சரியப்படுத்தும் முடிவு

2023 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக மொத்தமாக ஏழு ஓவர்கள் மட்டும் பந்துவீசி இரண்டு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார். ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியிலேயே முதல் 10 பந்துகளிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். வழக்கம்போல் இவரும் சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு சிறப்பாக செயல்படுகிறார்.