எடுத்து வைங்கடா 5ஆவது கோப்பையை… டெல்லியை 146க்கு பொட்டலம்கட்டி.. பிளே-ஆப் சுற்றுக்குள் கெத்தாக நுழைந்த சிஎஸ்கே!

0
795

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 116 ரன்களுக்குள் சுருட்டி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்குவதாக அறிவித்தார் மகேந்திர சிங் தோனி.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஓபனிங் ஜோடி அபாரமாக விளையாடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டெவான் கான்வே 87 ரன்கள், ருத்துராஜ் கெய்க்வாட் 79 ரன்கள் அடித்தனர்.

சிவம் துபே 9 பந்துகளில் 22 ரன்கள் மற்றும் ஜடேஜா 7 பந்துகளில் 20 ரன்கள் அடித்து கடைசியில் நல்ல கேமியோ விளையாடி கொடுக்க, 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த டெல்லி அணி ஆறுதல் வெற்றியை பெறலாம் என்கிற நோக்கில் 224 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்தியது.

- Advertisement -

கேப்டன் டேவிட் வார்னர் ஒரு முனையில் நின்று கொண்டு நங்கூரம் போல விக்கெட் இழக்காமல் விளையாடி வந்தார். எதிர்முனையில் விளையாடிய வீரர்கள் எவரும் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இதனால் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி.

224 ரன்கள் இலக்க துரத்த வேண்டிய டெல்லி அணி பவர்பிளே ஓவர்களுக்குள் வெறும் 34 ரன்கள் மட்டுமே அடித்து மூன்று விக்கெடுகளை பறிகொடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. அதன்பின்னரும் சிஎஸ்கே அணியின் விக்கெட் வேட்டை நிற்கவில்லை.

கடைசி வரை போராடிய டேவிட் வார்னர் 58 பந்துகளில் 86 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 8 பந்துகளில் 15 ரன்கள் அடித்தே இருந்தது. வேறு எவரும் பெரிதளவில் ஸ்கோர் அடிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் மட்டுமே அடித்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

14 போட்டிகள் முடிவில் 17 புள்ளிகள் பெற்ற சிஎஸ்கே அணி, தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

இரண்டாவது இடத்திலேயே நிலைக்குமா? அல்லது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுமா? என்பது கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடும் போட்டியின் முடிவில் தெரியவரும். ரன்ரேட் பொறுத்து மாற்றம் இருக்கும்.