தோனி ஸ்பெஷலா ரெடி ஆகி இருக்காரு.. லக்னோ அணியை பழி வாங்க போறோமா? – சிஎஸ்கே மைக் ஹஸி பேட்டி

0
627
Hussey

நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. கடந்த போட்டியில் இந்த அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி சில முக்கிய விஷயங்கள் தொடர்பாக பேசி இருக்கிறார்.

தற்போது ஏழு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளை வென்றிருக்கும் சிஎஸ்கே அணிக்கு, நாளை ஐபிஎல் தொடரின் மறுபாதி ஆட்டங்கள் ஆரம்பிக்க இருக்கின்றன. எனவே இரண்டாவது பாதி ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதே சமயத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகள் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடுவது சாதகமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசும்பொழுது “தோனி போட்டிக்கு வருவதற்கு பயிற்சி செய்து மிகவும் நன்றாக தயாராகி விட்டார். நிச்சயமாக பந்துவீச்சாளர்கள் அவருக்கு எதிராக புதிய திட்டங்களை தீட்டி கொண்டு வருவார்கள். ஏனென்றால் அவர் நீண்ட காலமாக சிறந்த பினிஷர் ஆக இருந்து வருகிறார்.

நிச்சயம் எதிரணி தோனிக்காக வித்தியாசமான திட்டங்களை கொண்டு வரும். தற்பொழுது 42 வயதாகும் அவர் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டு, புதிய பரிணாமத்தில் தன்னை மேம்படுத்திக் கொண்டு, பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் கடினமாக இருக்கிறார். இது அவரைப் பற்றிய அற்புதமான விஷயங்களில் ஒன்று.

ரச்சின் சிறந்த முறையில் சென்று கொண்டிருக்கிறார். பேட்டிங் என்பது நிலையற்ற ஒன்று என்று உங்களுக்கு தெரியும். குறிப்பாக நீங்கள் துவக்க இடத்தில் ஒரு ரோலில் வந்தால், அதை அப்படியே எடுத்துச் செல்ல முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளை தவற விட்டு இருக்கிறார். ஆனால் அவர் மனதளவில் சிறந்த நிலையில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி கோலி வேறு வேறு முடிவு.. விமர்சித்த கைஃப்.. லைக் செய்த விராட் கோலி.. என்ன நடந்தது?

அதேபோல் லக்னோ அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு இது பழிவாங்கும் போட்டியாக நாங்கள் பார்க்க மாட்டோம். இங்கு ஒவ்வொரு ஆட்டமும் கடினமானது. நாங்கள் அவர்களுக்கு பழக்கமானசூழ்நிலையில் சென்று விளையாடினோம். அந்த போட்டியில் நாங்கள் சிறப்பாகவே சண்டை செய்தேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.