“சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் தான் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய அணிகள் இந்த மோதலுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம்” – பாப் டுப்லசி மற்றும் முகமது சிராஜ் உற்சாக பேட்டி!

0
175

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனின் 24 ஆவது போட்டியில்
நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியும் சாம்பியன் பட்டத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் ஆர்சிபி அணியும் மோத இருக்கின்றன.

இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும். இந்தப் போட்டியை பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே முக்கியமான ஒரு போட்டியாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காண்பதற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வெற்றி பெற்ற ஆர்சிபி அதன்பிறகு நடைபெற்ற லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியில் தோல்வியை தழுவியது. சனிக்கிழமை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

மறுபுறம் சென்னை அணியும் நான்கு புள்ளிகள் உடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் பெங்களூர் அணியை விட சென்னை அணி அதிக புள்ளிகள் பெற்றிருப்பதால் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே விறுவிறுப்புக்கும் பரபரப்பு இருக்கும் பஞ்சமிருக்காது. இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளும் பரபரப்பான முடிவுகளையே ஏற்றி இருக்கின்றன. இந்தியாவிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட இரண்டு வீரர்கள் எதிரெதிர் அணியில் மோதும் போது ரசிகர்களுக்கிடையேயான மோதலும் சூடு பிடிக்கும்.

- Advertisement -

இந்தப் போட்டி பேசியிருக்கும் பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டுப்லசி “இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் வெற்றி தீர்ந்து விட்டன. எல்லோரும் ஐபிஎல் இல் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மோதல் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான மோதல் தான். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஜாம்பவான்கள் எதிர் எதிர்த்து துருவங்களில் நேருக்கு நேர் மோதுகின்ற ஒரு மோதல் என்பதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும். ஒரு வலுவான அணியுடன் மோத இருக்கிறோம். அரங்கம் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணியை சந்திப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் இந்த போட்டி பற்றி முகமது சிராஜ் கூறும்போது “சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இந்த இரண்டு அணிகள் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அணிகள். இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டிகள் எப்போதுமே பரபரப்பாகவே நடைபெற்று இருக்கின்றன. ரசிகர்களும் இந்த இரண்டு அணிகளும் விரும்புகின்றனர். நானும் சிஎஸ்கே உடனான போட்டியை விரும்புகிறேன் என்று கூறினார்.