மற்ற விளையாட்டு துறையிலும் பெயர்போன 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்

0
185
Yuzvendra Chahal and Brendon McCullum

கிரிக்கெட் வீரர்களை பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட் மட்டுமே விளையாடி அதன் பின்னர் தங்களது அணியில் இடம்பெற்று கிரிக்கெட் விளையாடுவார்கள் என்று இல்லை. ஒரு சிலர் அதற்கு மாறாக மற்ற விளையாட்டு துறையில் இருந்து அதன் பின்னர் கிரிக்கெட் விளையாட வந்த கதைகளும் உண்டு. அதேசமயம் கிரிக்கெட் உடன் இணைத்து மற்ற விளையாட்டுகளிலும் சிறப்பாக விளையாடி வரும் பல வீரர்களை பற்றி நமக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

அப்படி கிரிக்கெட் போட்டியிலும் மிகப்பெரிய அளவில் விளையாடி அதே சமயம் மற்ற விளையாட்டு துறையிலும் மிக சிறப்பாக விளையாடிய வீரர்கள் பற்றி பார்ப்போம்

- Advertisement -

5. பிரண்டன் மெக்கல்லும்

நியூசிலாந்து கிரிக்கெட் வரை முறையை மாற்றி அமைத்ததில் இவருக்கு ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. இவரது தலைமையின் கீழ் விளையாடிய வீரர்கள் அனைவரும் பிட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மிக சிறப்பாக விளையாடி முதல் முறையாக நியூசிலாந்து அணியை உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இவர் தனது பள்ளிப் பருவத்தில் முதலில் ரக்பி விளையாடியது குறிப்பிடத்தக்கது. மிக சிறப்பாக விளையாடி அதன் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தொடங்கி பின்னாளில் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஜான்டி ரோட்ஸ்

இவனைப் போல் மைதானத்தில் நின்று ஃபீல்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. தென்னாபிரிக்கா அணிக்காக இவர் ஃபீல்டிங் மூலமாக தடுத்த ரன்கள் ஏராளம். இன்று முறை உலக அளவில் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் பீல்டர் யார் என்று கேட்டால் அனைவரும் இவரது பெயரை நிச்சயமாக கூறுவார்கள்.

- Advertisement -

கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாக 1992ஆம் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் தனது தென் ஆப்பிரிக்க அணிக்காக ஹாக்கி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் இவர் ஒரு மிகச்சிறந்த ஹாக்கி பிளேயர்.

1996ம் ஆண்டு இவரது காலில் எதிர்பாராத விதமாக ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சனை வந்த காரணத்தினால் ஹாக்கி விளையாட்டில் இருந்து வெளியேறி கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஏபி டிவில்லியர்ஸ்

மிஸ்டர் 360 என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார் உண்மையில் மிகச் சிறந்த புத்திசாலி. பந்து எங்கே எந்த வேகத்தில் வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து, அதனை மிக துல்லியமாக கணித்து அடிப்பதில் இவர் வல்லவர்.

டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டியில் மட்டுமின்றி ஹாக்கி, டென்னிஸ் மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளில் மிகவும் அற்புதமாக விளையாடுவார். தனது சுயசரிதை புத்தகத்தில் இந்த விளையாட்டுகளிலும் தான் மிகவும் அற்புதமாக விளையாடுவதாக குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2. ருடி வான் வூரென்

நபி பி அணிக்காக 2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் விளையாடிய ஒரு சிறந்த வீரர் இவர். கிரிக்கெட் போட்டியில் மட்டுமின்றி தனது நாட்டு அணிக்காக சர்வதேச அளவில் உலக கோப்பை தொடரில் ரக்பி போட்டியிலும்
பங்கு பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடிப்படையில் இவர் ஒரு பிஸீஷியன். அனைத்து வகையிலும் இவர் தேர்ச்சி பெற்றவர். நபிபியா அணைக்காக 1997 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. சஹால்

இந்திய அணியில் தற்பொழுது உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் ஒரு மிகச்சிறந்த வீரர் சஹால் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வரும் ஒரு வீரர்.

அடிப்படையில் சஹால் கிரிக்கெட் போட்டியில் மட்டுமின்றி செஸ் விளையாட்டிலும் கை தேர்ந்தவர். இந்திய அளவில் நடந்த பல செஸ் போட்டி தொடர்களில் பங்கு பெற்று மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.