18 வயதிற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த 4 வீரர்கள்

0
1547
Sachin Tendulkar and Mohammad Ashraful Test

மூன்று வித கிரிக்கெட் பார்மட்டில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஆர்வமும் ரசிகர்களும் அதிகம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் முழு திறனும் சோதிக்கப்படும். தங்கள் நாட்டிற்க்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது பல வீரர்களின் ஆசை. ஆனால் அதில் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைக்கின்றது. ஏனென்றால், டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவதற்கு அதிக பயிற்சியும் பொறுமையும் அவசியம்.

ஒரு சில திறமை வாய்ந்த வீரர்கள், இளம் வயதிலேயே டெஸ்ட் அணியில் இடம் பெற்று, குறிகிய காலத்தில் நிறைய ரன்கள் சேர்த்து வருகின்றனர். சமீபத்தில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் பிரித்வி ஷா. சதம் விளாசும் போது பிரித்வி ஷாவின் வயது பதினெட்டை விட அதிகம். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஒரு சில வீரர்களும் சதம் அடித்து சாதனை படைத்து உள்ளனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

4. ஹாமில்டன் மசாகட்சா (17 வயது 352 நாட்கள்)

Hamilton Masakadza


ஜிம்பாப்வே அணிக்காக இளம் வயதில், டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்த வீரர் என்ற பெருமையைக் கொண்டவர் ஹாமில்டன் மசாகட்சா. ஜிம்பாப்வே அணிக்காக இவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்கிறார். வலது கை வீரரான இவர் 2001-02ல் மேற்கிந்திய அணிக்கு எதிராக இச்சதத்தை விளாசினார்.

ஹராரே மைதானத்தில் 316 பந்துகளில் 119 ரன்கள் அடித்து ஜிம்பாப்வே அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டார் ஹாமில்டன் மசாகட்சா.18 வயது ஆவதற்கு ஒரு சில தினங்கள் முன்பே இச்சதத்தை இவர் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சச்சின் டெண்டுல்கர் (17 வயது 107 நாட்கள்)

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில், இளம் வயதில் சதம் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே நம் நினைவிற்கு வரும் வீரர் சச்சின் தான். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் இவ்வீரர், சிறுவயது முதல் கிரிக்கெட்டின் மீது அதிக அன்பு கொண்டவர்.

- Advertisement -

அதோடு நிறுத்தாமல், இளம் வயதிலேயே இந்திய அணிக்கு விளையாடும் அளவிற்கு திறமையும் கொண்டவர். தன்னுடைய 17வது வயதியலேயே அவர் சதம் அடித்து கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையைப் பதிவு செய்தார். மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 408 ரன்கள் தேவைப்பட்டது. சரிவில் இருந்த இந்திய அணியை அப்போட்டியில் டிரா செய்ய சச்சினின் 119* ரன்களே உதவின.

2. முஷ்தாக் முகம்மது (17 வயது 78 நாட்கள்)

இந்திய அணிக்கு எதிராக இளம் வயதில் சதம் அடித்த வீரர் இந்த முஷ்தாக் முகம்மது. இவர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர். டெல்லியில் நடந்த இப்போட்டியில் ஆறாவது வீரராக களமிறங்கிய முஹம்மது முதல் இன்னிங்சில் 101 ரன்கள் விளாசினார். இந்த 17 வயது வீரர் அடித்த சதத்தினால், பாகிஸ்தான் அணி போட்டியை டிரா செய்தது.

- Advertisement -

1. முஹம்மது அஷ்ரஃப்புல் (17 வயது 61 நாட்கள்)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே, மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் பங்களாதேஷின் முன்னாள் கேப்டன் முஹம்மது அஷ்ரஃப்புல். ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு எதிராக இச்சாதனையை இவர் படைத்தார். 212 பந்துகளில் 114 ரன்கள் அடித்தார். மேலும், பங்களாதேஷ் அணியை தோல்வியில் இருந்தும் காப்பாற்றினார்.