கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் ஒரு வலதுகை பேட்ஸ்மேன் வலது கையில் பந்து வீசுவார், அதேபோல இடதுகை பேட்ஸ்மேன் இடது கையில் பந்து வீசுவார். ஆனால் ஒரு சில வீரர்கள் வலது கையில் பேட்டிங் செய்து இடது கையில் பந்து வீசுவார்கள், அதே போலவே இடது கையில் பேட்டிங் செய்து வலது கையில் பந்து வீசுவார்கள்.
ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்கள் இவற்றை எல்லாம் விட வலது கையில் பந்து வீசி அதே சமயம் இடது கையிலும் பந்துவீச கூடிய திறமை பெற்றுள்ளனர். அப்படி தங்களது இரண்டு கைகளிலும் வந்து வீசக்கூடிய திறமை பெற்ற பந்துவீச்சாளர்களை பற்றி தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.
5. ஹசன் திலகரத்னே
இலங்கை அணிக்காக 83 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். எனினும் அனைத்து தேவைப்படும் நேரத்தில் தனது வலது கையை பயன்படுத்தி ஆஃப் ஸ்பின் பவுலிங்கை போடுவார்.
சில சமயங்களில் தனது இடது கையிலும் ஸ்பின் பவுலிங்கை போடக் கூடிய திறமை பெற்றவர். குறிப்பாக 1996 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக இவர் தன்னுடைய இரண்டு கைகளையும் பயன்படுத்தி மிக அற்புதமாக ஸ்பின் பவுலிங் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. கிரஹாம் கோச்
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் கவுண்டி கிரிக்கெட் தொடரில் எஸ்செக்ஸ் அணிக்காக விளையாடிய ஒரு வீரர். மிக சிறப்பாக பேட்டிங் செய்ய கூடிய இவர் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் சில சமயம் தனது வலது கையை பயன்படுத்தி மீடியம் வேகத்தில் பந்து வீசுவார்.
118 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இவர் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரும் ஒரு சில சமயத்தில் தனது வலது கையை பயன்படுத்தி பந்து வீசுவதைப் போலவே மிகச் சிறப்பாக தனது இடது கையையும் பயன்படுத்தி மீடியம் வேகத்தில் பந்து வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அக்ஷய் கர்நேவர்
விதர்பா அணிக்காக உள்ளூர் ஆட்டங்களில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் இவர். டொமஸ்டிக் இல்லாவிடில் இந்திய அணிக்காக லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். விதர்பா அணிக்காக விஜயசாரதி டிராபி தொடரில் 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஒரு மிகச் சிறந்த பந்து வீச்சாளர் ஆவார். அடிப்படையில் இவர் ஒரு இடதுகை ஸ்பின் பவுலர்.
இடது கையில் எப்படி சிறப்பாக பந்துவீசிகிறாரோ அதேசமயம் தனது வலது கையிலும் மிக சிறப்பாக பந்தை சூழற்றி பந்துவீச கூடிய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் இவர். எனவே இவர் தன்னுடைய திறமையை பயன்படுத்தி எதிரடி பேட்ஸ்மேனுக்கு ஏற்ப இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஹனீப் முஹம்மது
பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் இந்த அபாரமான திறமையை தனக்குள் வைத்திருக்கிறார். ஸ்பின் பவுலிங் போடக்கூடிய இவர் பல சமயங்களில் வலது கையில் ஆப் ஸ்பின் போடுவார். ஆனால் ஆட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் ஒரு சில சமயங்களில் தனது இடது கையையும் பயன்படுத்தி ஸ்பின் பவுலிங் போட கூடிய திறமையான வீரர் இவர்.
கர்பீல்டு சோபர்ஸ் ஆட்டம் இழக்காமல் 365 ரன்கள் அடித்த போட்டியில் கூட இவர் சில முறை தனது இடது கையில் பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. கமிண்டு மென்டிஸ்
Thanks to your votes, the inaugural winner of the #U19CWC @Nissan Play of the Tournament is Kamindu Mendis! pic.twitter.com/NqumKnXSvE
— ICC (@ICC) February 14, 2016
அண்டர் 19 உலக கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 17 வயதான இவர் மிக சிறப்பாக பந்து வீசி வீசினார். இவர் அடிப்படையில் தனது வலது கையில் ஆஃப் பிரேக் பௌலிங் வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளர். ஆனால் அதே சமயம் தனது இடது கையில் ஆர்த்தடாக்ஸ் பின் போடக்கூடிய திரும்பியும் இவர் பெற்றிருக்கிறார்.
இவரது திறமையை வெகுவாக அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அந்த போட்டியில் தன்னுடைய இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப இவர் பந்து வீசிய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.