கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டி வரும் 5 தலைமை பயிற்சியாளர்கள்

0
692
Justin Langer and Ravi Shastri

ஒரு அணியின் வெற்றிக்கு வீரர்கள் எவ்வளவு பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கான ஆண்டு வருமானம் நிர்ணயிக்கப்படும். அப்படிப்பட்ட அணியை தலைமை தாங்கும் கேப்டனுக்கு விளையாடும் வீரர்களை விட சற்று சம்பளம் அதிகமாக வழங்கப்படும்.

அதைப்போல மொத்த அணியை போட்டிக்கு முன்பும் போட்டிக்கு பின்பும் சரியாக வழிநடத்தி அவர்களுக்கான பயிற்சியை முறையாக கொடுத்து மனதளவில் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து மைதானத்தில் விளையாட வைக்கும் பயிற்சியாளர்களுக்கும் குறிப்பிட்ட வருமானம் நிர்ணயிக்கப்படும். அப்படி அதிக வருமானம் வாங்கி வரும் பயிற்சியாளர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ரவி சாஸ்திரி 10 கோடி

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் 2014ஆம் ஆண்டு இரண்டு வருடங்கள் இந்திய அணிக்கு கிரிக்கெட் இயக்குனராக பதவி வகித்தார்.2016ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே ஒரு சில காரணங்களால் நான் இனி இந்தியாவுக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கப் போவதில்லை என்று கூறியதை அடுத்து, கிரிக்கெட் இயக்குனராக இருந்த ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்க பட்டார். அன்று முதல் இன்று வரை இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. பல வெற்றிகளை இவரது தலைமையில் வாங்கிவந்த தான் காரணமாக இவரது வருமானம் சுமார் 10 கோடி என்பது குறிப்பிடதக்கது.

ஜஸ்டின் லங்சர் – 4.67 கோடி

2016ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தில் ஒரு பயிற்சியாளராக இருந்து வந்த ஜஸ்டின் 2018 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்க பட்டார். பால் டம்பெரிங் சர்ச்சை காரணமாக டேரன் தலைமைப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதன் காரணமாக, அவருக்கு பதிலாக இவர் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

அதன்பின்னர் இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரில் டிராபியை கைப்பற்றியது, மேலும் 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இவரது வருவாய் 4.67 கோடி ஆகும்.

கிறிஸ் சில்வர்உட் – 4.65 கோடி

2019ஆம் ஆண்டு ட்ரெவர் பேலிஸ் தலைமையில் இங்கிலாந்து அணி உலக கோப்பை தொடர் கைப்பற்றியதை தொடர்ந்து, இவர் இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.இவரது வருமானம் இந்திய மதிப்பில் 4.65 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்கி ஆர்த்தர் – 3.44 கோடி

2019ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த இவரை அதன் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் தங்களது புதிய பயிற்சியாளராக நியமித்தது. இவரது தலைமையின் கீழ் விளையாடி அணிகள் சிறப்பாக பங்களிக்க காரணத்தினால் இவரை ஸ்ரீலங்கா நிர்வாகம் நம்பி புதிய பயிற்சியாளராக நியமித்தது.

இலங்கை அணி சமீப வருடங்களாக மிக மோசமாக விளையாடி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக பலமுறை அந்த அணியின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். மிக்கி ஆர்த்தர் தலைமையில் இலங்கை அணி இனிவரும் காலங்களில் மிக சிறப்பாக விளையாடும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவரது வருமானம் இந்திய மதிப்பில் 3.44 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்பா உல் ஹக் – 1.79 கோடி

2019ம் ஆண்டு மிக்கி ஆர்த்தர் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னர் மிஸ்பா புதிய தலைமை பயிற்சியாளராக இணைக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தென் ஆப்பிரிக்கா ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்த தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது. மிக சிறப்பாக அணியை வழிநடத்தி வரும் இவருக்கு அவமானம் இந்திய மதிப்பில் 1.79 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.