கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிஎஸ்கே அணிக்கு வந்த சஞ்சு சாம்சன் தோனியின் இடத்தை நிரப்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் தோனியின் இடத்தை மிகத் துல்லியமாக தற்போது வாங்கப்பட்டு இருக்கும் கார்த்திக் சர்மாதான் நிரப்புவார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தற்போது 19 வயதான கார்த்திக் சர்மா ராஜஸ்தான் மாநில அணிக்கு விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். மேலும் நடப்பு ரஞ்சித் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சமீபத்தில் இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எல்லா வடிவத்திலும் விளையாடும் திறமை படைத்தவராக இருக்கிறார்.
நான்கு விக்கெட் கீப்பர்கள்
சிஎஸ்கே அணியில் இந்த மெகா ஏலத்திற்கு முன்பாகவே மகேந்திர சிங் தோனி சஞ்சு சாம்சன் மற்றும் உர்வில் படேல் என மொத்தம் மூன்று இந்திய விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் கார்த்திக் சர்மா நான்காவது விக்கெட் கீப்பராக சிஎஸ்கே அணியில் இணைந்திருக்கிறார்.
முதலில் பிரசாந்த் வீர் ரவீந்திர ஜடேஜா இடத்திற்காக 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன் கேப்டு வீரர் என்ற சாதனையைப் பெற்றார். சற்று நேரத்திலேயே கார்த்திக் சர்மா அதே 14.20 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே அணியால் வாங்கப்பட்டு தானும் அந்த சாதனையில் இணைந்தார்.
தோனி இடத்தில் கார்த்திக் சர்மா
தற்போது சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்திருக்கும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 30 வயதை தாண்டி இருப்பதோடு, பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் மட்டுமே விளையாடுவார். எனவே சிஎஸ்கே அணிகள் அடுத்த 10 ஆண்டுகள் இருக்கக்கூடிய வீரர் இவர் கிடையாது.
இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு செக் வைத்த குஜராத் கேகேஆர்.. திரும்ப பிளமிங் செய்த காரியம்.. இப்பவே கப் உறுதி
அதே சமயத்தில் கார்த்திக் சர்மாவுக்கு தற்பொழுது 19 வயதுதான் ஆகிறது. மேலும் இவர் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு கீழே விளையாட முடிந்தவர். தோனியை போல் போட்டியை முடிக்கும் திறமை பெற்றிருக்கிறார். இவரால் பவர் ஹிட்டிங் முறையில் பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது. இவர் ஓரளவுக்கு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாலே அடுத்த பத்து ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் விளையாட முடியும். எனவே தோனியின் இடத்தை இவர்தான் நிரப்புவார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்!






