சிஎஸ்கேவுக்கு செக் வைத்த குஜராத் கேகேஆர்.. திரும்ப பிளமிங் செய்த காரியம்.. இப்பவே கப் உறுதி

0
386
Fleming

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி சிறிய பின்னடைவுக்குப் பிறகு அற்புதமான முறையில் இரண்டு வீரர்களை வாங்கி திரும்ப வந்திருக்கிறது.

இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் என்ற இரண்டு இந்திய உள்நாட்டு இளம் வீரர்களுக்கு தலா 14.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஒரு ஐபிஎல் ஏலத்தில் அன் காபிடு இந்திய வீரருக்கு கொடுக்கப்பட்ட மிக அதிகபட்ச தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

செக் வைத்த குஜராத் மற்றும் கொல்கத்தா

இந்த முறை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் ஜேசன் ஹோல்டரை சிஎஸ்கே வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஏலத்திலும் சிஎஸ்கே அவருக்கு சென்றது. ஒரு கட்டத்தில் அவரை சிஎஸ்கே வாங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுது குஜராத் களத்தில் குதித்து இறுதிவரை சென்று ஏழு கோடிக்கு வாங்கி விட்டது.

இதற்கு அடுத்து ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடி உள்ள முஸ்தஃபிஷர் ரஹீமை சிஎஸ்கே எதிர்பார்த்தபடியே வாங்க சென்று கடுமையாக கொல்கத்தா அணியிடம் போராடியது. இருந்த போதும் கொல்கத்தா அணி விட்டுத்தராமல் 9.20 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது. இந்த இரண்டு வீரர்கள் ஒருவரை வாங்கி இருந்தாலும் சிஎஸ்கே அணி ஏறக்குறைய செட்டில் ஆகி இருக்கும்.

- Advertisement -

திரும்பி வந்த சிஎஸ்கே

ஜேசன் ஹோல்டரை வாங்க முடியாமல் போனாலும் கூட வேகப்பந்து வீச்சு மற்றும் பவர் ஹிட்டிங் செய்ய முடிந்த இந்திய உள்நாட்டு வீரர் அமன் கானை வெறும் 40 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. இந்திய வீரராகவே அமைந்து விட்டதால் வெளிநாட்டு வீரரை இந்த ஆல் ரவுண்டர் இடத்திற்கு வீணடிக்க தேவையில்லை.

இதையும் படிங்க: 28.40 கோடி.. சிஎஸ்கே ஏலத்தில் சாதனை.. யார் இந்த பிரசாந்த் வீர் கார்த்திக் சர்மா? – சுவாரசிய தகவல்கள்

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் ஆப்ஸ் பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை வெறும் 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இரண்டு வெவ்வேறு விதமான ஆல் ரவுண்டர்களை இரண்டு கோடி ரூபாய்க்குள் வாங்கியதால் சிஎஸ்கே அணி மீண்டும் ஏலத்தில் திரும்பி வந்து தற்போது செட்டில் ஆகி இருக்கிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பலம் வாய்ந்ததாக களத்தில் இறங்கும்!

- Advertisement -