பும்ரா உடல் தகுதி இருந்தால் தான் விளையாட முடியும் – லெஜன்ட் வால்ஸ் வெளிப்படையான அறிவுரை

0
18
Walsh

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிவிட்டது. ஆனாலும் அந்த அணியில் அதிக பணிச்சுமை கொண்டிருக்கும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. எதிரணியில் பும்ரா குறித்து லெஜன்ட் கரீபியன் கோர்ட்னி வால்ஸ் முக்கிய அறிவுரை ஒன்றைக் கூறியிருக்கிறார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை ஓரளவுக்கு கௌரவமாக முடிப்பதற்காக, தன்னுடைய எல்லா நட்சத்திர வீரர்களையும் உள்ளடக்கி அணியை களம் இறக்கி விளையாடுகிறது. இந்திய அணியை வழிநடத்த வேண்டிய ரோஹித் சர்மாவும் தொடர்ந்து விளையாட வேண்டியதாக இருக்கிறது.

- Advertisement -

இன்னொரு புறத்தில் இந்திய அணிக்கு நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரராக பும்ரா இருக்கும்போது, வேகப்பந்துவீச்சாளரான அவருக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அப்படிப்பட்ட ஒன்றை சிந்திக்கவே கிடையாது என வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்பொழுது பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் கீரன் பொல்லார்டு இதுகுறித்து பேசி இருந்த பொழுது பும்ராவுக்கு ஓய்வு கிடைக்காது என்பதாகவே தெரிகிறது. இப்படியான நிலையில் தான் வால்ஸ் மிக முக்கிய அறிவுரை ஒன்றை அவருக்கு கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கும் பொழுது “உறுதியாக இருங்கள் நீங்கள் எவ்வளவு அதிக போட்டிகள் விளையாடுகிறீர்களோ அவ்வளவு சிறப்பாக மாறுவீர்கள். ஆனால் நான் பேசுவது உடல் தகுதியைப் பராமரிப்பது பற்றியது. நீங்கள் உடல் தகுதியுடன் இருந்தால் தான் டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியும். எனவே அது குறித்தான முன் தயாரிப்புகள் தேவை.

- Advertisement -

இதையும் படிங்க : இதுக்கு மேல என்ன வேணும்?.. அபிஷேக் ஷர்மா இந்திய அணிக்கு வரனும் – ஆர்சிபி முன்னாள் கோச் பேட்டி

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களின் பலமாக இருக்கிறது எனவே அவர்கள் செய்திருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியிலும்மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எப்படி என்றாலும் தேர்வுகள் அணி சமநிலையை பாதிக்க கூடாது” எனக் கூறியிருக்கிறார்