இதுக்கு மேல என்ன வேணும்?.. அபிஷேக் ஷர்மா இந்திய அணிக்கு வரனும் – ஆர்சிபி முன்னாள் கோச் பேட்டி

0
484
Abhishek

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கிறார். அவரது திறமை குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக அபிஷேக் சர்மா உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக கிரிக்கெட் வட்டாரங்களில் ஐபிஎல் தொடரில் அவர் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. ஆனால் அவர் பேட்டிங்கில் இந்த அளவுக்கு வெடிப்பார் என எந்த கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

மேலும் ஹைதராபாத் அணியில் முன்பு பயிற்சியாளராக இருந்த லாரா, மற்றும் யுவராஜ் சிங் அவருடைய தந்தை என இவருடைய கிரிக்கெட் பயிற்சியில் தற்காலத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களாக இருக்கிறார்கள். யுவராஜ் சிங் தற்போது இவருக்கு ஒரு வழிகாட்டியாக தொடர்ந்து இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய பேட்டிங்கில் வேகப்பந்து வீச்சை இவர் சராசரியாக விளையாடினாலும் கூட, சுழல் பந்துவீச்சை இவர் விளையாடும் முறை மிக அபாரமாக இருக்கிறது. சேவாக் அடிப்பது போல பந்தை பார்த்து மிக அனாயசமாக அடிக்கிறார். இவரது இந்த திறமை பவர் பிளே தாண்டியும் ரன்கள் அடிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 12 போட்டிகளில் விளையாடி 401 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் பிரமிக்கத்தக்க விஷயமாக இருப்பது அவருடைய ஸ்ட்ரைக் ரேட்தான். அது 205 என்று பிரம்மாண்டமான அளவில் இருக்கிறது. ஒரு பந்துக்கு இரண்டு ரன் வீதம் அடித்திருக்கிறார். எனவே டி20 உலகக் lகோப்பைத் தொடர் முடிந்து, டி20 இந்திய அணிகள் மாற்றங்கள் செய்யப்படும் பொழுது அபிஷேக் ஷர்மா இருக்க வேண்டும் என ஆர்சிபி முன்னாள் பயிற்சியாளர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: கோலியின் வெற்றிக்கு உண்மையான காரணம் இதுதான்.. யாரும் சொல்லாத விஷயத்தை சொன்ன யுவராஜ் சிங்

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அவரால் பவர் பிளேவில் சுழல் பந்துவீச்சை மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்பது என்னுடைய கருத்து. மேலும் அவர் வேகத்துக்கு எதிராகவும் கணிசமான அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார். பவுண்டரிகள் தேடி அடிப்பதில் அவர் சிறந்த வீரராக இருக்கிறார். டி20 உலகக் கோப்பைக்கு பிறகு சில மாற்றங்கள் இருக்கும். அப்பொழுது ஜெய்ஸ்வால், கில் போன்ற பல பெயர்கள் இருக்கிறது. ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அபிஷேக் சர்மா பெயரை மக்கள் பேசுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.