கவுண்டி கிரிக்கெட்டை தாக்கிய இந்திய சூறாவளி பிரித்வி ஷா.. முறியடித்த சாதனைகளின் லிஸ்ட்.. பிரபல ஆஸ்திரேலிய வீரரின் சாதனையும் சமன்.!

0
426

சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா போன்ற அருமையான பேட்ஸ்மன்களை உருவாக்கிய மும்பை நகரில் இருந்து இந்திய அண்டர் 19 அணியை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் வழி நடத்தியவர் தான் ப்ரீத்வி ஷா. அந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தவர்.

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்ட இவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிரடி சதத்துடன் தொடங்கினார். எனினும் மோசமான ஃபார்ம் மற்றும் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர் 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

மேலும் கடந்த வருட ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா எட்டு போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு நடைபெற்ற ரஞ்சி போட்டிகளில் நல்ல பார்மில் இருந்தாலும் ஐபிஎல் தொடரில் இவரது மோசமான ஆட்டம் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது .

அதனைத் தொடர்ந்து தனது சொந்த வாழ்வில் சர்ச்சை என ப்ரீத்வி ஷாவிற்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே இருந்தன. ஒரு பக்கம் ப்ரீத்வி ஷா விமர்சனத்திற்கு உள்ளானதோடு மறுபக்கம் அவரது அண்டர் 19 நண்பரான சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடர்களிலும் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ப்ரீத்வி ஷா கௌடி கிரிக்கெட்டில் அடித்த இரட்டை சதத்தின் மூலம் மீண்டும் தான் யார் என்பதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்குமே உணர்த்தி இருக்கிறார்.

நார்த்தம்டன்ஷர் அணிக்காக விளையாடிய ப்ரித்வி ஷா கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் 153 பந்துகளில் 244 ரன்கள் எடுத்து தன்னை விமர்சித்து வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இதில் 28 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் அடங்கும் . இந்த ரண்களின் மூலம் கண்டி கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்திருக்கிறார் ப்ரீத்வி ஷா.

- Advertisement -

அவர் எடுத்திருக்கும் இரட்டை சதத்தின் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் எடுத்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் . மேலும் கவுண்டி கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் தற்போது ப்ரீத்தி ஷா வசம் உள்ளது. மேலும் கவுண்டி கிரிக்கெட்டின் ஒரு நாள் போட்டிகளுக்கான வரலாற்றில் இரட்டை சதம் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா. மேலும் பிரித்வி ஷா எடுத்த 244 ரன்கள் தான் கவுண்டீ கிரிக்கெட்டின் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் ஒரு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்பு சர்ரே அணியின் வீரர் அலி பிரவுன் 206 ரன்கள் எடுத்திருந்தது ஒரு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது . இந்த சாதனையை பிரித்வி ஷா முறியடித்து இருக்கிறார் .

மேலும் பிரித்விஷா எடுத்த இரட்டை சதத்தின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் தன்னையும் இனைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மூன்று இரட்டை சுகங்களையும் ஆஸ்திரேலியா அணியின் டிராவஸ் ஹெட் மற்றும் இங்கிலாந்து அணியின் கவுண்டி வீரரான அலி பிரவுன் ஆகியோர் இரண்டு இரட்டை சதங்களையும் அடித்து இருந்தனர். இவர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் பிரித்வி ஷா .