கான்வே காயம்.. சிஎஸ்கே-வில் ரச்சின் ரவீந்திரா ஓபன் செய்ய 3 முக்கியமான காரணங்கள்

0
170
Rachin

நியூசிலாந்து அணியின் இடது கை துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டி20 தொடரில் கைவிரலில் காயம் அடைந்து, தற்போது அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், மேற்கொண்டு அவரால் எட்டு வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால் அவரால் பாதிக்கும் மேற்பட்ட ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவர் இடது கை பேட்ஸ்மேன் ஆக இருப்பதோடு, விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்வார். எனவே அவர் இரண்டு ஆப்ஷன் தருவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். தோனி இல்லை என்றாலும் அவரது இடத்தை இவரால் நிரப்ப முடியும்.

மேலும் வெளிநாட்டு வீரர்களில் இந்திய சூழ்நிலையில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களில் ஒருவராக கான்வே இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் 600 க்கும் மேற்பட்ட ரன்களை சத்தமில்லாமல் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவர் ரன்கள் கொண்டு வரும் முறை மிகவும் புத்திசாலித்தனமானது. எனவே இவரது இடத்தை ரச்சின் ரவீந்தரா மூலம் நிரப்புவதே சரியானதாக இருக்கும். ஏன் என்று பார்க்கலாம்.

- Advertisement -

உலகக்கோப்பை செயல்பாடு :

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். மேலும் அவர் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற் பந்துவீச்சு இரண்டையும் எதிர்கொண்ட விதம் அபாரமாக இருந்தது. எனவே இந்திய சூழ்நிலையில் ஏற்கனவே சாதித்து இருக்கும் இவரை துவக்க ஆட்டக்காரராக அனுப்பலாம். மேலும் ருதுராஜ் உடன் இணைந்து ரைட் லெப்ட் காம்பினேஷன் கொடுப்பார்.

பவுலிங் ஆப்ஷன் :

இவர் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பலத்தை கொடுக்கக் கூடியதாக அமைகிறது. சேப்பாக்கம் ஆடுகளத்தில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சில் பெரிய உதவிகளை செய்ய முடியும். இதனால் அணியை மாற்றி அமைக்கவும் மகேந்திர சிங் தோனிக்கு பெரிய வாய்ப்புகள் உண்டு. தேவைப்பட்டால் தீக்ஷனாவை கூட வெளியில் வைத்து, மொயின் அலியை விளையாட வைக்கலாம்.

இதையும் படிங்க : “அப்ப கோலி கோபப்பட்டதுக்கு காரணமே வேற.. இன்னொருத்தரும் ஸ்லெட்ஜ் பண்ணாரு” – உண்மையை சொன்ன நவீன் உல் ஹக்

நீண்டகால முதலீடு :

பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாட முடிவது, சுழற்பந்து வீச்சு பவுலிங் ஆப்ஷன் கொடுப்பது, மேலும் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பது என வெரைட்டியான வீரராக இருப்பதோடு, 24 வயதான இளம் வீரராகவும் இருக்கிறார். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீண்ட காலத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வைப்பதற்காக, இவர் மேல் முதலீடு செய்யலாம்.

- Advertisement -