மீண்டும் டெஸ்ட் அணிக்கு வருகிறீர்களா ? மொயின் அலிக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பி கேட்ட மெக்கல்லம் ; ஒரே வரியில் பதிலளித்த மொயின் அலி

0
316

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய இனி தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் பணியாற்றியிருக்கிறார். அவருடைய பயிற்சியில் இங்கிலாந்து அணி இன்று முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இங்கிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கின்றது. அவருடைய பயிற்சியில் இங்கிலாந்து அணி எப்படி செயல்படப் போகின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்

இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வீரரான மொயின் அலி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டார். 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2914 ரன்கள் மற்றும் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், ஒரு தற்பொழுது ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறியிருக்கிறார்.”பிரண்டன் மெக்கல்லம் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். நீங்கள் தயாராக இருக்கிறீர்களா, வருங்காலத்தில், அடுத்த தொடரில் அல்லது நேரம் கிடைக்கும் பொழுது நீங்கள் மீண்டும் அழைத்து வர முடியுமா என்று கேட்டார்.

- Advertisement -

அதற்கு நான் நேரம் வரும்போது என்னை கூப்பிடுங்கள் என்று ரிப்ளை செய்தேன். நானும் அவரும் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறோம். கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”, என மொயின் அலி கூறியிருக்கிறார்.

நடக்கும் விஷயத்தை எல்லாம் பார்க்கையில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் மொயின் அலி விளையாடப் போகிறார் என்று மட்டும் தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரை நாம் பார்த்திருப்போம்.