தென்னாப்பிரிக்கா இந்தியா தொடர்.. தொடங்கும் நாள் நேரம்.. எந்த டிவி சேனலில் ஒளிபரப்பு.?.. முழு அட்டவணை விவரங்கள்.!

0
13307

இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட் போட்டி தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் டி20 போட்டி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் டி20 அணியை சூரிய குமார் யாதவும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியை கே எல் ராகுலும் வழிநடத்த இருக்கின்றனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 12ஆம் தேதி கிகியபெரஹ நகரில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தொடங்கும்.

டி20 போட்டிகளைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடர் ஆரம்பமாகும். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 19ஆம் தேதி கிகியபெரஹ நகரில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி மாலை 4:30 மணிக்கு ஆரம்பமாகும். மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பார்ல் நகரில் அமைந்துள்ள போலாண்ட் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 4:30 மணிக்கு தொடங்க இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இறுதி கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த இரண்டு அணிகளும் போது முதலாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி முடிவடைகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் அமைந்துள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் வருடம் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி 7-ஆம் தேதி முடிவடைகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளும் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. மேலும் இதன் இணையதளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும். ஜனவரி 7ஆம் தேதியுடன் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க பயணம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் ஆரம்பமாக உள்ளது.