“வெற்றிக்கு காரணம் இவங்க ரெண்டுபேர்தான் .. நான் அவங்ககிட்ட இருந்து கத்துக்கறேன்” – ராகுல் டிராவிட் பேச்சு

0
675
Dravid

உள்நாட்டில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இழந்த பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெரிய தொடராக இந்திய அணிக்கு அமைந்திருந்தது.

இந்த தொடரில் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இந்த நெருக்கடியான நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்தி, தொடரை நான்குக்கு ஒன்று என வென்று, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த தொடரில் வென்றது வெற்றி என்ற அளவில் மட்டும் இல்லாமல், எதிர்கால இந்திய அணிக்கான வீரர்களை கண்டுபிடித்தது, மற்றும் இந்தியாவில் எந்த அளவிற்கு திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதைவெளியில் காட்டியது இன்று இந்தத் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

எனவே இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வளர்க்கும் பொருட்டு உற்சாகமடைந்திருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பள உயர்வையும் அறிவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இந்த வெற்றிக்கு முழு பெருமை அணிக்குச் சாரும். தொடரின் முதல் போட்டியில் தோற்று பின்தங்கினாலும் கூட அடுத்த சிறப்பாக எழுந்து வந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் தொடர்ந்து முன்னேறி செல்லும் வீரர்களை கண்டறிந்து இருக்கிறோம். பல்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். வெளிப்படையாகவே சில முக்கியமான வீரர்களை இழந்தோம்.

- Advertisement -

ஆனால் இந்தியாவில் மிகச் சிறப்பான நம்ப முடியாத அளவிற்கு திறமைகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இளைஞர்கள் சிறப்பாக வந்து செயல்படுவதை பார்க்க அருமையாக இருக்கிறது. ஒரு அழகான அணியுடன் இணைந்து பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இது என்னைப் பற்றி மட்டும் கிடையாது. நான் இவர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்கிறேன்.

ரோகித் சர்மா உடன் பணி புரிவது மிகவும் அருமையாக இருக்கிறது. அவர் ஒரு அற்புதமான தலைவர். இளம் வீரர்களை தன்னை நோக்கி அழகாக ஈர்க்கிறார். இதைபார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது.

இதேபோல் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் தேர்வு குழுவினருக்கும் பாராட்டுக்கள் கொடுக்கப்பட வேண்டும். கேப்டன் மற்றும் பயிற்சியாளரால் சிறந்த வீரர்கள் யார் என்று பார்க்க முடியாது. தேர்வாளர்கள் எங்களுக்கு தேவையான சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். அந்த வீரர்கள் இங்கு வந்து சிறப்பாக செயல்பட்டார்கள்.

இதையும் படிங்க : இங்கிலாந்தை வீழ்த்தி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா மாஸ் கம்பேக்

இந்த தொடரில் ஒரு குறிப்பிட்ட தருணத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாது. தொடர் முழுவதும் சிறப்பாக இருந்தது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடு திரும்பி மீண்டும் வந்து விளையாடியது அருமையான நிகழ்வாக அமைந்தது. மேலும் இது எப்படிப்பட்ட அணி என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.