கம்பேக் கொடுக்கும் சின்ன தல ரெய்னா.. அமெரிக்க தொடரில் கம்பீர் மற்றும் யுவராஜ் உடன் பங்கேற்பு

0
2252

டி20 கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு உலகெங்கிலும் கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது . தற்போது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கிரிக்கெட் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. ஐபிஎல் போன்ற t20 கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவிலும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர் .

இந்நிலையில் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவைச் சார்ந்த டி டென் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம். நடத்த இருக்கிறது . இந்த பத்துபவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவின் ஆறு நகரங்களைச் சார்ந்த அணிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

- Advertisement -

இந்த டி10 கிரிக்கெட் போட்டியில் அட்லாண்டா ஃபயர், கலிபோர்னியா நைட்ஸ், மோரிஸ்வில்லி யூனிட்டி, நியூ ஜெர்சி லெஜண்ட்ஸ், நியூயார்க் வாரியர்ஸ் மற்றும் டெக்சாஸ் சார்ஜர்ஸ் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கு பெற உள்ளன. இந்தத் தொடரில் உலகில் ஓய்வு பெற்ற முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர் . டி10 மாஸ்டர்ஸ் லீக் என இந்த தொடருக்கு பெயரிடப்பட்டிருக்கிறது.

இதில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் கரோலினா நகரில் வைத்து நடைபெற்றது . இந்த ஏலத்தில் இந்தியாவைச் சார்ந்த யுவராஜ் சிங்,கௌதம் கம்பீர்,இர்பான் பதான் சுரேஷ் ரெய்னா,யூசுப் பதான் போன்ற வீரர்களும் பாகிஸ்தான அணியின் சாஹித் அப்ரிதி மிஸ்பா உல் ஹக் மற்றும் கம்ரான் அக்பர் உள்ளிட்ட வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்திய அணியின் யுவராஜ் சிங் கௌதம் கம்பீர் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் நியூ ஜெர்சி லெஜண்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர். மேலும் இந்திய வீரர்களான முகமது கைஃப் , சுரேஷ் ரெய்னா மற்றும் இர்பான் பதான் ஆகியோர் கலிபோர்னியா நைட்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரும் யுனிவர்சல் பாஸ் க்ரிஷ் கெயில் மற்றும் இந்திய அணியின் ஹர்பஜன்சிங், ஆகியோர் மோரிஸ்வில்லி யூனிட்டி அணிக்காக விளையாட உள்ளனர் .மேலும் பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சாகித் அப்ரிதி மற்றும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கம்ரான் அக்மல் ஆகியோர் நியூயார்க் வாரியர்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்.