நடராஜனை அணியில் சேர்க்காததற்கு காரணம் இதுதான் – தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியது

0
9564
Chetan Sharma and Thangarasu Natarajan

T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்டது. பலரும் எதிர்பார்த்த வீரர்கள் இருந்ததாலும் அணியை வழிநடத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் ஒரே ஒரு கவலை ரசிகர்களுக்கு ஏண்டா என்றாள் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஓமன் மற்றும் அமீரக மைதானங்களில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இதற்காக நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் இடம்பெறவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சன்ரைசர்ஸ் அணியில் பிரதான பந்துவீச்சாளர் ஆகி, மிகச் சிறப்பாக பந்துவீசி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன். மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து கிரிக்கெட் அரங்கில் கலக்கியவர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் நிற்காமல் அதில் சாதித்த கையோடு சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார். ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் இன்று சிறப்பாக பந்துவீசி கடைசியில் டெஸ்ட் அணியிலும் இடம் கொடுத்து அசத்தினார் நடராஜன். இப்படி குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தைத் தொட்ட நடராஜன் நீண்ட நாட்கள் இந்திய அணிக்கு பங்களிப்பாளர் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் ஏன் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தேர்வு குழுவின் சேர்மேன் சேட்டன் சர்மா தற்போது கூறியுள்ளார்.

அவர் பேசும்போது, “நடராஜனின் பெயரை நாங்கள் விவாதித்தோம் ஆனால் அவருக்கு இருக்கும் காயம் காரணமாக அவரை எங்களால் அணியில் சேர்க்க முடியவில்லை. காயத்தின் காரணமாக அரசுக்கு எதுவும் எடுக்காமல் பிரதான பந்துவீச்சாளர்களிடமே சென்று விட்டோம்” என்று கூறியுள்ளார். மேலும் அமீரக மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு பெரிதும் ஒத்துழைக்காததால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் நிறுத்தி விட்டோம். அணியில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது நல்லதுதான் என்றாலும் காயம் காரணமாக அவரை எங்களால் எடுக்க முடியவில்லை” என்று சேட்டன் சர்மா கூறியுள்ளார்.

இருந்தாலும் அக்டோபர் 10ஆம் தேதி வரை அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம் என்று இருப்பதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ஒருவேளை நடராஜன் அணிக்கு திரும்பினாலும் திரும்பலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -