“சென்னை எனக்கு இன்னொரு வீடு மாதிரி!” – உலக கோப்பையில் கலக்கும் மிட்சல் சான்ட்னர் சிறப்பு பேச்சு!

0
655
Santner

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடி ஆப்கானிஸ்தான் அணி 139 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது!

இந்த வெற்றி நியூசிலாந்து அணிக்கு நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் இந்திய அணியை கீழே இறக்கி நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. மேலும் அந்த அணியின் ரன் ரேட் இந்திய அணியை விட மிகச் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட காலமாக விளையாடும் நியூசிலாந்தைச் சேர்ந்த மிட்சல் சான்ட்னர், ஆல் ரவுண்டிங் துறையில் நியூசிலாந்து அணிக்கு பெரும் பலத்தை சேர்த்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

போட்டி முடிவுக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் “ஐபிஎல் தொடரில் விளையாட வரும் பொழுது இதே போன்ற விக்கெட்டுகளை இங்கு நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட்டில் இன்று கொஞ்சம் விருப்பம் இருந்தது தெரிந்தது. மேலும் இரண்டாம் பகுதியில் விளக்குகளின் கீழ் பந்து நன்றாகவே சுழன்றது. நாங்கள் டாசை இழந்தது எங்களுக்கு நல்லதாக அமைந்தது. சென்னை எனக்கு இன்னொரு வீடு போன்றது.

100 விக்கெட் என்ற மைல் கல்லை பெறுவது நல்ல விஷயம். ஒரு நாள் கிரிக்கெட்டில் டேனியல் வெட்டரி சாதனையை பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை. நான் அதை ஏற்றுவதற்கு இன்னும் 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

நாங்கள் ஒட்டுமொத்தமாக கூட்டு சேர்ந்து பாட்னாஷிப்பாக பந்து வீசுகிறோம். இன்று நாங்கள் அதைப் பற்றி தான் பேசினோம். ஆரம்பத்தில் போல்ட் மற்றும் ஹென்றி சிறப்பான முறையில் பந்துவீசி அழுத்தம் தந்தார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் அடுத்து வரக்கூடிய எங்களை அடித்து விளையாட வேண்டிய தேவை உருவாகிறது. அப்பொழுது எங்களுக்கு விக்கெட்டுகள் வருகிறது!” என்று கூறியிருக்கிறார்!