“ஐந்து முறை சாம்பியன் பட்டம் கொண்டிருக்கிறோம் “…. “எப்படி திரும்பி வருவது என்று எங்களுக்கு தெரியும்” …”மாற்றத்தை என்னிடமிருந்து ஆரம்பிக்கிறேன்” – மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பு !

0
792

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வரும் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும் லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் குஜராத் மற்றும் சென்னை அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திலும் இருக்கின்றன .

இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் மும்பை டெல்லி ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த வருட ஐபிஎல் தொடரிலும் பத்தாவது இடத்தில் முடித்தது. இந்த வருட ஐபிஎல் தொடரையும் இரண்டு தோல்விகளுடன் துவங்கியிருக்கிறது .

- Advertisement -

தங்களது முதல் போட்டியை பெங்களூர் அணிக்கு எதிராக ஆடிய மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . நேற்றைய போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்துள்ளது மும்பை அணியில் முக்கிய வீரர்கள் இடம் பெறாத நிலையில் இளம் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு அந்த அணி சரிவுகளை சந்தித்து வருகிறது. வலிமையான பேட்டிங் வரிசை இருந்தும் முதல் இரண்டு போட்டிகளிலும் தங்களது முத்திரையை பதிக்க தவறிவிட்டனர்.

அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் வீரர்களின் பொறுப்பு குறித்து பேசி இருக்கிறார் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இதுகுறித்து தனது பேட்டியில் தெரிவித்திருக்கும் அவர் ” அணியில் இருக்கும் ஊத்த வீரர்கள் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும்.. அந்த விஷயத்தை என்னிடம் இருந்து துவங்க நான் விரும்புகிறேன் . இதுவரை இரண்டு போட்டிகளில் தான் ஆடி இருக்கிறோம் . அதனால் எதுவும் முடிந்து விடவில்லை ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்து வெற்றியுடன் தொடரில் முன்னோக்கி செல்வது அவசியம் . அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட வேண்டியது அணியின் அவசியம் . இரண்டு போட்டியில் தானே முடிவடைந்து இருக்கிறது இனி நல்ல திட்டங்களுடன் வருவோம் என்று கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறோம் . அதனால் எப்படி கம்பேக் கொடுப்பது என்று எங்களுக்கு தெரியும் ஐபிஎல் போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வந்து கொண்டே இருக்கும் . அதுபோன்றுதான் தோல்வியும். அதனால் அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். நிறைய விஷயங்களை நாங்கள் சரியாக செய்ய வேண்டும். எந்தெந்த விஷயங்களில் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் திட்டமிட்டவாறு செயல்படுத்தவில்லை என நினைக்கிறேன். நான் இனிவரும் போட்டிகளில் அவற்றையெல்லாம் திருத்திக் கொண்டு முத்து வீரர்கள் அதிக பொறுப்புடன் விளையாடுவார்கள் என்ன தெரிவித்தார் ரோஹித்.

- Advertisement -