ஆசிய கோப்பை பாக் அணியில் மாற்றம்.. 2 புதிய வீரர்கள் சேர்ப்பு.. வெளியேறும் இந்திய போட்டியில் ஆடிய வீரர்கள்.!

0
3765

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 356 ரன்களுக்கு இரண்டு விக்கெட் களை மட்டுமே இழந்திருந்தது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சதம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

- Advertisement -

அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹாரிஸ் ரவுப் மற்றும் நசிம் ஷா ஆகிய இருவரும் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் எட்டு விக்கெட்டுகள் மட்டுமே இளந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் காயங்களை தொடர்ந்து உன்னை எச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வீரர்களை புதியதாக அணியில் சேர்த்திருக்கிறது பாகிஸ்தான்.

இதற்காக ஆசிய கோப்பை டெக்னிக்கல் கமிட்டி இடம் அனுமதி வாங்கி அந்த அணியில் இரண்டு வேகபந்து வீச்சாளர்கள் ஜமான் கான் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகிய இருவரும் பேக் அப் வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் பந்து வீசிய ஹாரிஸ் ரவுப் நேற்று நடைபெற்ற அந்த போட்டியின் தொடர்ச்சியின் போது பந்து வீச வரவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக நேற்றைய இந்திய அணியின் பேட்டிங் போது பந்து வீசவில்லை.

மேலும் நேற்றைய போட்டியில் முழுவதுமாக பந்து வீசிய நஷீம் ஷா தன்னுடைய பந்து வீசும் வலது கையின் தோள்பட்டையில் வலி இருப்பதாக அறிவித்ததால் நேற்றைய போட்டியின் போது பேட்டிங் ஆட வரவில்லை. மேலும் உலக கோப்பை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம் என்பதால் அணியில் இரண்டு புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்

- Advertisement -

மேலும் ஹாரிஸ் ரவுப் மற்றும் நசிம் ஷா ஆகிய இருவரும் இலங்கை அணி போட்டி மற்றும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றால் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது சிறிய காயம் தான் என்றாலும் ஆசியக் கோப்பையில் மீதம் இருக்கும் போட்டிகள் மற்றும் உலகக்கோப்பை போட்டிகளை மனதில் வைத்து இந்த போட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை விளையாட அனுமதிக்கவில்லை என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக இன்று பரிசோதனை செய்வோம். அவர்கள் இருவரையும் நேற்று பேட்டிங் ஆட வைப்பதில் அணிக்கு எந்த ஊரு உபயோகமும் இல்லை. அப்படி அவர்களை பேட்டிங் செய்ய அனுமதி தெரிந்தால் அது அவர்களின் காயத்தை தான் அதிகப்படுத்தும். அவர்கள் இருவரும் நிச்சயமாக ஆசிய கோப்பையில் அணிக்கு திரும்புவார்கள் என நம்பிக்கையுடன் கூறி முடித்தார் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் ப்ராட் பர்ன்

- Advertisement -