உலக டெஸ்ட் பைனலில் இந்தியா வெற்றி பெறாது.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தினேஷ் கார்த்திக்.. காரணம் என்ன?

0
2914

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.இந்த போட்டியில் வெற்றி பெற கடைசி இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

இதில் கடைசி நாளில் இந்திய அணி மேலும் 280 ரன்கள் அடிக்க வேண்டும். கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு.

- Advertisement -

இது நிச்சயம் இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆடுகளம் மிகவும் சவாலான சூழலில் இருக்கும்.இதனால்  அபாயகரமான பந்துகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த சூழலில் நிச்சயமாக 60 70 ரன்கள் கூட ஒரு பேட்ஸ்மேன் ஆல் அடிக்க முடியாது. இந்திய அணியின் இந்த கடினமான சூழல் காரணம் முதல் நாளில் மோசமாக பந்து வீசியது தான். ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் மிகப்பெரிய இலக்கை இந்த மைதானத்தில் பெற்றுள்ளது.

ரஹானே, சர்துல் தாக்கூர் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினாலும் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஓவல் மைதானத்தின் ஆடுகளம் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு சவால்களை கொடுக்கும். இந்த ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன் சில பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினார்கள்.

- Advertisement -

மேலும் பந்தின் பவுன்சும் ஓரளவுக்கு குறைவாக இருக்கும். இதன் காரணமாக எல் பி டபிள்யூ ஆகும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை நிச்சயமாக பாதிக்கும். கடைசி நாளில் 97 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.

இதில் இந்திய அணி 280 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் இந்த மைதானத்தில் 250 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக இரண்டு முறை தான் கடைசி இன்னிங்ஸில் துரத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 120 ஆண்டு கால சாதனையை உடைக்க வேண்டியது இருக்கும்.