சாம்பியன்ஸ் டிராபி: ஜெயிக்கும் அணி வீரர்கள் வெள்ளை கோட் அணிவது ஏன்.?. சுவாரசிய பின்னணி காரணம்

0
26

சாம்பியன்ஸ் டிராபி தொடர் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்கள் இதயத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும். ஏனென்றால் உலகக்கோப்பை தொடர்போல் பல கத்துக் குட்டி அணிகள் இல்லாமல் டாப் எட்டு அணிகள் இந்த தொடரில் மோதும்.

அது மட்டும் இல்லாமல் ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரை  விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். மேலும் இந்த தொடரில் இந்திய அணி காலம் காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பைனலில் தோல்வியை தழுவிய இந்திய அணி 2002 ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

- Advertisement -

இதை அடுத்து 2013 ஆம் ஆண்டு மீண்டும் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி 2017 இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. தற்போது ஹாட்ரிக் முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு வந்திருக்கிறது.

மறக்க முடியாத 2013 சாம்பியன்ஸ் கோப்பை:

2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியாவில் வென்ற போது சொந்த மண்ணில் நடைபெற்றதால் தான் இந்தியா கோப்பையை வென்றது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை பொய்யாக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கிய தோனி தலைமையிலான இந்திய அணி இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் வென்று அசத்தியது.

- Advertisement -

அப்போது இந்திய  வீரர்கள் அனைவரும் வெள்ளை கோட் அணிந்து பரிசை வாங்கினார்கள். இதேபோன்று 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்களும் வெள்ளை நிற கோட்டை அணிந்துதான் சாம்பியன்ஸ் கோப்பையை வாங்கினார்கள்.

முதல் முறையாக அணியப்பட்டது எப்போது?

ஏன் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெள்ளை நிற கோட் அணியப்படுகிறது. இது எப்போது தொடங்கப்பட்டது என்பதை தற்போது பார்க்கலாம். சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 1998 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தாலும் முதல் முறையாக வெள்ளை நிற கோட் அணியப்பட்டது 2009 ஆம் ஆண்டு தான். அது முதல் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: CT 2025 பைனல்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஆடுகளம் குறித்து வெளியான தகவல்.. இந்திய அணி ரசிகர்கள் மகிழ்ச்சி

இதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். வெள்ளை நிறம் தலைசிறந்த பண்பையும் யுக்திகளை நன்றாக வகுக்கும் நிபுணர்களையும் குறிக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த அணிகள் மட்டுமே விளையாடும் நிலையில் அதில் யார் சிறந்தவர்கள் என்று தீர்மானிக்கப்படுவதால் அவர்களை கௌரவிக்கும் விதமாகத்தான் இந்த வெள்ளை நிற கோர்ட் வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இது போல் ஒரு நடைமுறை விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் மாஸ்டர்ஸ்  கோல்ப் தொடரிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -