ஐபிஎல் 2024.. ஆர்சிபி பவுலிங்கை கிண்டலடித்த சாஹல்.. கோபத்தில் பெங்களூர் ரசிகர்கள்

0
2451

ஐபிஎல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மிக முக்கியமான பந்துவீச்சாளராகத் திகழ்ந்தவர் யுவேந்திர சஹால். போட்டியின் நெருக்கடியான கட்டங்களில் இவர் பந்துவீசி விக்கெட்டுக்களை வீழ்த்தக் கூடியதில் வல்லவர்.

2021ம் ஆண்டுக்குப் பின்னர் பெங்களூரு அணி நிர்வாகம் சாஹலைத் தக்க வைக்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுத்தது. 2022ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக சாஹல் சிறப்பாக விளையாடி ஊதா நிற தொப்பியை வென்றார். ஆனால் பெங்களூர் அணி நிர்வாகம் இவரை ஏன் விடுவித்தது என்றும் இன்னும் பலருக்கு புரியவில்லை. பெங்களூர் அணியில் இருந்து வெளிவந்த பிறகு சாஹலும் இந்திய அணியில் தொடர்ந்து சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சகாலுக்கு பதிலாக 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கை வீரரான வனிந்து ஹசரங்கா 2022 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடினார். ஆனால் 2023 ஆம் ஆண்டு காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. பெங்களூர் அணி கடந்த சீசனில் அரை இறுதி வரை வந்த தோல்வியைத் தழுவியது. இதனை சரி செய்யும் வகையில் பெங்களூர் அணி நிர்வாகம் நடந்து முடிந்த மினி ஏலத்தில் பந்து வீச்சு யூனிட்டை மாற்றி அமைக்க முயற்சி செய்தது.

ஹர்சல் பட்டேல், ஹசரங்கா மற்றும் ஹெசில்வுட் ஆகியோரை விடுவித்தது. மேலும் மும்பை அணியில் இருந்து கேமரூன் கிரீனை டிரேடிங் முறையில் பெங்களூர் அணி வாங்கிக் கொண்டது. இதன் காரணமாக பெங்களூர் அணிக்கு பட்ஜெட்டில் கொஞ்சம் இருக்கம் இருந்தது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஜாரி ஜோசபை 11.50 கோடி ஏலத்தில் வாங்கியது. மேலும் இறுதிக்கட்டத்தில் நியூசிலாந்து அணி வீரர் பெர்குசனை அவரது அடிப்படை விலையில் வாங்கியது.

மேலும் சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை பெங்களூர் அணிக்கு கரண் ஷர்மா மற்றும் மயங்க் தாகர் மட்டுமே குறிப்பிடப்படும் படி உள்ளனர். வலிமையாக அணியை கட்டமைக்க நினைத்து மேலும் தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டது. பெங்களூர அணியின் ஆல் ரவுண்டராக இருந்த சபாஷ் அஹமதுவையும் சன்ரைசர்ஸ் அணி வாங்கிக் கொண்டது.

- Advertisement -

இந்நிலையில் சக விளையாட்டாளர்களுடன் யுவேந்திர சஹால் ஆன்லைன் கேம் இல் தோன்றினார். அப்போது சக வீரர் ஒருவர் பெங்களூரு அணியின் பந்துவீச்சு தோற்றம் குறித்து கேட்டார். அதற்கு சகால் பதிலளிக்கும் விதமாக “மொயி மொயி” என்று செர்பிய பாடலில் இருந்து உருவான வார்த்தையை குறிப்பிட்டார். இந்தப் பாடல் கிண்டல் அடிக்கும் விதமாக தற்போது சோசியல் மீடியா மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே சாஹலும் கிண்டலாக பெங்களுர் அணியைக் கலாய்த்து உள்ளார். பெங்களூரு அணியின் மிக தீவிரமான ரசிகர்கள் இதைக் கண்டு சஹால் மீது கோபத்தில் உள்ளனர்.