கேப்டனாக ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாத 6 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
3450
Gambhir Raina

அனைத்து வித கிரிக்கெட்டிலும் இந்திய அணி உயர்ந்த இடத்தில் உள்ளது. 20 ஓவர் கோப்பை, 50 ஓவர் கோப்பை, 60 ஓவர் கோப்பை ஆகிய மூன்றையும் வென்ற ஒரே அணி இந்தியா தான். இந்திய அணியை இதுவரை பல வீரர்கள் வழி நடத்தி உள்ளனர். அதில் ஒரு சிலர் இந்திய கேப்டன்கள் மிகவும் அற்புதமாக செயல்பட்டு உள்ளனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்றால் நம் நினைவுக்கு வருபவர் எம்.எஸ்.தோனி மட்டுமே.

அவரது தலைமையின்கீழ், இந்திய அணி 2007ல் டி20 உலகக் கோப்பை, 2011ல் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றுள்ளது. இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தார். அதே சமயம் அவரது கேப்டன்சியில் இந்திய அணி தோல்விகளையும் சந்தித்துள்ளது. போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வியே சந்திக்காத வீரர்கள் உண்டோ ? நிச்சயம் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

1. கௌதம் கம்பீர் (ஓடிஐ)

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக 97 ரன்கள் விளாசினார். அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. ஒரு வீரராக மட்டுமில்லாமல் ஒரு கேப்டனாகவும் கம்பீர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரது வழிகாட்டுதலின் படி, கொல்கத்தா அணி இரண்டு முறை ஐ.பி.எல் பட்டத்தை வென்றது.

கௌதம் கம்பீர், இந்திய அணியை 6 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். 2010ல் நியூசிலாந்துக்கு எதிராக 5-0 என ஒருநாள் தொடரை வென்று சாதனைப் படைத்தார். பின்னர், டிசம்பர் 2011ல் மேற்கிந்திய தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

2. ரவி சாஸ்திரி (டெஸ்ட்)

நடப்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பணிபுரிகிறார். அவருக்கு கீழ் இந்திய அணி மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறது. ரவி சாஸ்திரி விளையாடிய காலக் கட்டத்தில், அவர் அதிரடியான ஆல்ரவுண்டராக திகழ்ந்தார்.

- Advertisement -

ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ரவி சாஸ்திரி, இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை 255 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

3. அஜிங்கியா ரஹானே (ஓடிஐ)

இவர் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன். இப்பட்டியலில் உள்ள வீரர்களில் இவர் மட்டுமே ஓய்வு பெறாதவர். சமீபத்தில், கேப்டன் விராட் கோஹ்லி இல்லாத நேரத்தில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி ஃபார்டர் – கவாஸ்கர் டிராபியை கைப்பற்றியது.

இவரது கேப்டன்சியில் இந்திய அணி ஒரு டெஸ்ட்/ஒருநாள் போட்டியில் கூட தோல்வி பெறவில்லை. ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி மற்றும் ஒரு போட்டி டிராவில் முடிந்தது. மேலும், இவரது தலைமையின்கீழ் இந்திய அணி ஆடிய மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளது.

4. விரேந்தர் சேவாக் (டி20)

இந்திய அணியின் அதிரடி ஒப்பனரான சேவாக், தனித்துவமான ஓர் சாதனையை வைத்துள்ளார். இவர் 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக தோல்வியை பெற்றதில்லை. விரேந்தர் சேவாக், இந்திய அணியை ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே வழி நடத்தியுள்ளார். இந்திய அணி விளையாடிய முதல் 20 ஓவர் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வென்றது. அதன் பின்னர் சேவாக், டி20 போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவில்லை.

5. அனில் கும்ப்ளே (ஓடிஐ)

கும்ப்ளே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தலைமை தாங்கினார் என அனைவருக்கும் தெரியும். அவர் ஒருநாள் போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்று பலருக்கு தெரியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மேட்சுகளில் தோல்வி அடைந்தாலும் ஓடிய போட்டிகளில் கேப்டன்-ஆகா ஒரு போட்டியிலும் தோல்வி அடையவில்லை

2002ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் 3வது போட்டியில் அவர் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்தொடர் 3-3 என சமனில் முடிந்தது.

6. சுரேஷ் ரெய்னா (டி20)

இந்திய அணியின் மற்றொரு அதிரடி டி20 பேட்ஸ்மேனான ரெய்னா, இந்தியாவை மூன்று 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக விளையாடி உள்ளார். அதில் 2 போட்டிகள் ஜிம்பாப்வேக்கு எதிரானவை. கடைசி போட்டி 2011ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒன்று.

மூன்று போட்டிகளும் இந்திய அணியே வெற்றி பெற்றது. 2010ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார். அப்போட்டியில் அவர் 72 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார்.