நேற்று இந்திய அணி இங்கிலாந்து வேலைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வி அடைந்தது. இந்த நிலையில் வீரர்கள் செயல் பட்ட விதத்தில் தான் பெருமை அடைவதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.
இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் ஐந்து சதங்கள் அடித்து இருந்தது. ஒரு அணியில் ஒரு போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோல்வி அடைந்தது 148 வருட டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பீல்டிங் மற்றும் பந்துவீச்சு இந்த முறை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதுகுறித்து சுப்மன் கில் பேசும்பொழுது “இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டியாக இருந்தது. எங்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. நாங்கள் இந்த போட்டியில் கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம் மேலும் எங்களுடைய கீழ் வரிசை பேட்ஸ்மேன் ரன்கள் எடுக்கவில்லை. இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருந்த போதிலும் அணி செயல்பட்ட விதத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
” நாங்கள் நேற்று 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்யலாம் என்று இருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து விட்டார்கள். இது கிரிக்கெட்டில் களத்தில் நாம் விளையாடும் பொழுது நடக்கக்கூடியதுதான். ஆனால் இது எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் பேசி சரி செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கும். பந்துவீச்சை பொறுத்த வரையில் நாங்கள் சிறப்பாகவே இருந்தோம். இதற்கு மேல் இதில் எதுவும் செய்ய முடியாது”
“பந்து பழையதான பிறகு இங்கிலாந்து வீரர்களை தடுப்பது கடினமாக இருந்தது. அவர்கள் பந்து பழைய தான பிறகு தங்களுடைய வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். நீங்கள் ஆட்டத்தில் இருக்க சில விக்கெட்டுகளை கைப்பற்றி ஆகவேண்டும். ஆனால் நேற்று எங்களுக்கு கிடைத்த சில எட்ஜ் பீல்டர்களின் கைகளுக்கு செல்லவில்லை. அவர்களுடைய தொடக்க பார்ட்னர்ஷிப் எங்களிடம் இருந்து ஆட்டத்தை எடுத்து விட்டது”
இதையும் படிங்க: இந்திய அணியை நெனச்சா ஏமாற்றமா இருக்கு.. எங்க தோல்விக்கு முக்கிய காரணமே இதுதான் – கோச் கம்பீர் பேட்டி
“ரிஷப் பண்ட் சில கேட்ச் வாய்ப்பை விட்டார். ஆனால் அதுவெல்லாம் ஆட்டத்தின் போக்கில் விக்கெட் கீப்பருக்கு நடப்பது. மேலும் நடுவில் ஜடேஜா மிக அற்புதமாக பந்து வீசினார். தற்போது எங்களுக்கு ஒரு இளம் அணி கிடைத்திருக்கிறது. எங்கள் வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். இந்த போட்டியில் இருந்து நாங்கள் சில விஷயங்களை எடுத்து இருக்கிறோம். அடுத்த போட்டிக்கு அதை சரி செய்து நாங்கள் வருவோம்” என்று கூறி இருக்கிறார்.