நாளை தொடங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி விரும்பிய வகையில் மிகச் சிறப்பாக தயாராகி விட்டதாக அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறியிருக்கிறார்.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியில் மூத்த நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. சல்மான் அலி ஆகா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் சாம்பியன்
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக தொடர் நடைபெறும் யுஏஇ மண்ணில் முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் விளையாடிய தொடர் நடைபெற்றது. நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி அதிரடியாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணி 141 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியை தனது நான்கு ஸ்பின்னர்களை வைத்து வெறும் 66 ரன்னுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
முழுமையாக தயாராகி விட்டோம்
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள சல்மான் அலி ஆகா கூறும்போது “இந்த டிக்கெட்டில் 13 முதல் 140 ரன்கள் எடுப்பது எதிரணிக்கு சவால் ஆனதாக இருக்கும் என தெரியும். முகமத் நவாஸ் திரும்ப மீண்டும் வந்ததிலிருந்து, அவர் அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். என்னைப் பொறுத்தவரை கடினமான சூழ்நிலைகளில் நான் நம்பும் ஒருவர் அவர்”
இதையும் படிங்க: 342 ரன்.. இந்தியாவின் உலக சாதனையை உடைத்த இங்கிலாந்து.. தென் ஆப்பிரிக்கா மோசமாக சுருண்டு தோல்வி
“ஆசிய கோப்பைக்கு உதவும் வாழ்க்கையில் நாங்கள் தயாராக விரும்பினோம். நாங்கள் விரும்பிய படியே தற்போது தயாராகி இருக்கிறோம். பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம். இறுதியாக நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். ஆசியக் கோப்பை தொடருக்கு மிகச்சிறப்பாக தயாராகி விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.






