இந்திய கிரிக்கெட்

எங்களை யாரும் இந்த விஷயத்துல நம்பறது இல்ல.. ஆனா நாங்க அதை தாண்டி சாதிச்சிருக்கோம் – ருதுராஜ் வருத்தம்

நேற்று சிஎஸ்கே அணி தனது கடைசி போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாதது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொடர்ந்து சோதனைகள்

இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நாதன் எல்லீஸ் காயத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறினார். இதனால் பௌலிங் யூனிட் பலவீனமடைந்தது. இதைத் தொடர்ந்து தொடர் ஆரம்பித்ததும் முதல் மூன்று போட்டிகளில் அதிரடி வீரர் பிரிவிஸ் காயத்தால் விளையாடவில்லை.

பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இருந்த நிலையில் அணியில் முக்கிய வீரராக மாறிய ஜேமி ஓவர்டன் காயத்தால் வெளியேறினார். இவருக்கு முன்பாகவே ராமகிருஷ்ண கோஸ் காயத்தால் வெளியேறினார். இப்படி வீரர்களின் தொடர் காயங்களால் சிஎஸ்கே மிகவும் பலவீனமாக மாறியது.

- Advertisement -

எங்களை நம்பவில்லை

இதுகுறித்து ருதுராஜ் பேசும்போது “நாங்கள் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததும் சீசன் எங்களுக்கு கடினமாக மாறியது. ஆனாலும் நாங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று நல்ல உத்வேகத்தை பெற்றோம். இருந்த போதிலும் வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்தது எங்களுக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது. ஓவர்டன் கோஸ் இருவரும் வெளியேறியது எங்களை நிலைகுலைய செய்தது. கடைசி மூன்று போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் இல்லை ஒரு பவுலர் குறைவாகவே விளையாடினோம்”

இதையும் படிங்க: 2027 ஐபிஎல்லில் எம்எஸ் தோனி விளையாடுவாரா.? சிஎஸ்கே கேப்டன் சொன்ன சூசக தகவல்.. முழு விபரம்

“நாங்கள் பல இளம் வீரர்களைக் கொண்ட, ஒரு மாற்றத்தின் பாதையில் இருக்கும் இளம் அணி என யாரும் நம்புவதில்லை. எங்கள் அணியில் இருக்கும் 10 வீரர்கள் 20 போட்டிகளில் கூட விளையாடியதில்லை. தற்போது அவர்களுக்கு ஓரளவு அனுபவம் கிடைத்துள்ளது. எங்களுக்கு ஆறு போட்டிகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்கள் எங்கெங்கு முன்னேற வேண்டும் எனக் கண்டறிந்துள்ளோம். ராயுடு மற்றும் ரகானே போன்ற அனுபவ வீரர்கள் கிடைப்பது கடினம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by