2027 ஐபிஎல்லில் எம்எஸ் தோனி விளையாடுவாரா.? சிஎஸ்கே கேப்டன் சொன்ன சூசக தகவல்.. முழு விபரம்

0
211

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து முழுவதுமாக வெளியேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனி அடுத்த வருடமாவது ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்கிற கேள்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த முறையும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 230 ரன்கள் குவிக்க பதிலுக்கு சிஎஸ்கே 140 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்த வருடம் எம் எஸ் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயமடைந்து ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்து பேசிய அணியின் கேப்டன் ருத்ராஜ் ரசிகர்களைப் போலவே நானும் எம்எஸ் தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா? என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “எம்எஸ் தோனி விளையாடுவாரா? என்பது குறித்து கேட்கிறீர்கள். அந்த கேள்விக்கான உண்மையான தகவல் அடுத்த வருடம் தான் நமக்கும் தெரியவரும். எங்களுக்கு நிச்சயமாக அது ஒரு பேரிழப்பு தான். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் களமிறங்கும் அவரால் க்ரீசில் நிலைத்து நிற்பதன் மூலம் ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக அவரால் மாற்றி அமைத்து விட முடியும்.

எனவே அவர் அடுத்த வருடம் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவு அவர் கைகளில் மட்டுமே உள்ளது” என்று பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் ஏற்பட்ட தோல்விக்கு அடுத்த வருடம் சிஎஸ்கே மீண்டும் பலமாக திரும்ப வரும் என்றும் பேசியிருக்கிறார். சிஎஸ்கே கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் அதற்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி மூன்று வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -