உண்மைய சொல்லிடறேன்.. இந்த பசங்களுக்கு நாங்க இத செய்ய போறோம் – ரோகித் சர்மா வெளியிட்ட தகவல்

0
336
Mayank

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் இளம் வீரர்களை உள்ளடக்கி அழைத்துச் செல்வது உறுதி என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.

தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பெற்று இருக்கிறார்கள். திடீரென இவர்களை ரிசர்வ் வீரர்களாக கொண்டு வந்ததன் காரணம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரில் பெஞ்ச்வலிமை ஏன் அவசியம்?

இந்திய அணி அன்னிய சூழ்நிலையில் விளையாடுகிறது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் விளையாடுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்கின்ற காரணத்தினால் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம் மேலும் காயம் அடைகின்ற வாய்ப்பும் அதிகம்.

இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் தொலைநோக்காக பெஞ்சு வலிமையில் வேகப் பந்துவீச்சாளர்களை அதிகரிப்பதற்காக, தற்போது நான்கு இளம் பந்துவீச்சாளர்களை ரிசர்வ் வீரர்களாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் இந்திய அணியுடன் சேர்ந்து இருப்பார்கள். இது அவர்களுக்கு பல வகைகளில் பயன்படும்.

- Advertisement -

எங்களுடைய திட்டம் இதுதான்

இது குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் இவர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல விரும்புகின்ற காரணத்தினால், இவர்களை எங்களுடன் வைத்துக்கொள்ள ரிசர்வ் வீரர்களாக வைத்திருக்கிறோம். மேலும் இவர்களுடைய பணிச்சுமையை நிர்வகிக்கவும் விரும்புகிறோம் ஏனென்றால் இவர்கள் கடந்த காலத்தில் காயமடைந்தவர்கள். எங்களிடம் மாற்று பேட்ஸ்மேன்கள் நிறைய இருப்பது போல மாற்று வேகப் பந்துவீச்சாளர்களும் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : இந்திய அணி கூட திடீர்னு எங்களுக்கு இந்த லக் அடிச்சிருக்கு.. நாளைக்கு விடமாட்டோம் – டாம் லாதம் பேட்டி

“இதன் காரணமாக அவர்களை அணியுடன் இணைத்து நெருக்கமாக வைத்திருக்க முடிவு செய்தோம். இவர்கள் உடனே இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்கள் என்றால் நாங்கள் அப்பொழுது இவர்களை மிக எளிதாக இந்திய அணியில் இணைத்துக் கொள்ள முடியும். இவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடினார்கள். அப்போது இவர்களை நாங்கள் மிக நெருக்கமாக கண்காணித்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -