நாளை துவங்க இருக்கும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தங்களுக்கு சாதகமான ஒரு புதிய சூழ்நிலை உருவாகி இருப்பதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லதம் கூறியிருக்கிறார்.
தற்போது இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அச்சுறுத்தும் கனமழை
தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பலத்த கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று பெங்களூரிலும் சின்னசாமி மைதானத்தில் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் கால்வாய் வடிநீர் வசதி மிகவும் சிறப்பான முறையில் செய்யப்பட்ட மைதானம் என்பதால் உடனடியாக சரி செய்யப்பட்டு விடும்.
அதே சமயத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு மேகமூட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் போட்டி நடக்கும் ஐந்து நாட்களிலுமே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என வானிலை அறிக்கையும் தெரிவித்திருக்கிறது. தற்போது இதுவே நியூசிலாந்து அணிக்கு ஒரு புதிய சாதகத்தையும் உருவாக்கி இருக்கிறது.
எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு
இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறும்பொழுது “உண்மையில் நாங்கள் இப்படியான குளிரான வானிலையை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்தது போல் இங்கு சூடாக இல்லை. இதனால் எங்களுடைய வேகப்பந்து பேச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.மேலும் இங்கு விளையாடப்பட்ட முந்தைய ஆட்டங்களையும் நாங்கள் பார்ப்போம். இப்பொழுது கூறுவது கடினம்”
இதையும் படிங்க : 259 ரன்ஸ்.. பாபர் அசாம் இடத்தில் வந்த அறிமுக வீரர் அசத்தல் சதம்.. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் நிதானம்
“டிம் சவுதி கடைசியாக இங்கு விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் 60 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் எடுத்திருந்தார். காயம் காரணமாக எங்களின் ஒரு வேகப்பந்துவீச்சாளரான பென் சியர்ஸ் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இருந்து ரூல்டு அவுட் ஆகிவிட்டார். எனவே நாங்கள் மூன்று வேகப்பந்து பேச்சாளர்களுடன் செல்வதாக இருந்தால் டிம் சவுதி எங்களுக்கு மிகவும் சரியாக இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.






