லெஜன்ட் கேரி சோபர்ஸ் பட்டியலில் அஸ்வின்.. 50 ஆண்டு வரலாறு.. இங்கிலாந்துக்கு எதிராக மெகா ரெக்கார்ட்

0
97
Ashwin

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் தற்பொழுது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் அறிமுகமான ஆகாஷ் தீப் வேகப்பந்து வீச்சில் பும்ரா விட்ட இடத்தில் இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்.

இவருடைய பந்துவீச்சில் பென் டக்கெட், ஒல்லி போப், ஜாக் கிரவுலி என வரிசையாக வெளியேறினார்கள். இதன் காரணமாக இந்திய அணி போட்டிக்குள் எடுத்ததும் உள்ளே வந்தது.

இதற்கு அடுத்து பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஆனால் ஜோ ரூட் பாஸ்பால் விளையாடுவதை விட்டு பொறுமையாக ஒத்துழைக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக இவர்கள் ஆபத்தான ஜோடியாக தெரிந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஜானி பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை எல்பிடபிள்யு செய்து கடைசி நேரத்தில் வெளியேற்றினார். இந்திய அணிக்கு இது மிகவும் முக்கியமான விக்கெட்டாக அமைந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இது நூறாவது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த நான்காவது வீரராக, மிகப்பெரிய வரலாற்றுப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்தார்.

இந்தப் பட்டியலில் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் வெஸ்ட் இண்டிசை சேர்ந்த கேரி சோபர்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 3000 திற்கும் மேற்பட்ட ரண்களை அடித்து 100 விக்கெட்டுக்கும் மேல் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1954 முதல் 1974 வரை 20 ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி இந்த சாதனையை கொண்டு வந்திருக்கிறார். இதற்கு அடுத்த 50 வருடங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறார்.

இதையும் படிங்க : வெறும் 5.4 ஓவர்.. மேட்ச்யை திருப்பிய ஆகாஷ் தீப்.. கடைசியில் அஸ்வின் ஜடேஜா அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்தபட்சம் ஆயிரம் ரன்கள் 100 விக்கெட் எடுத்த வீரர்கள்:

கேரி சோபர்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் – வெஸ்ட் இண்டீஸ் 3214 ரன்கள் மற்றும் 102 விக்கெட்.
நோபிள் – ஆஸ்திரேலியா – 1905 ரன்கள் மற்றும் 115 விக்கெட்.
கிப்பின் – ஆஸ்திரேலியா – 1238 ரன்கள் மற்றும் 103 விக்கெட்.
அஸ்வின் – இந்தியா – 1085 ரன்கள் மற்றும் 100 விக்கெட்