நேற்று ஐபிஎல் தொடர் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக மோசமான நாளாக அமைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி 277 ரன்கள் விட்டுத் தந்தது. ஐபிஎல் தொடரில் ஒரு அணி பந்துவீச்சில் விட்டு தந்த மற்றும் பேட்டிங்கில் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.
மேலும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைந்து இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரன் வேகத்தை பும்ராவை வைத்து தடுக்கத் தவறி இரண்டாவது போட்டியிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் பலமான அணியாகவும், ப்ளே ஆப் சுற்றுக்கு உறுதியாக தகுதி பெறும் எனவும் மும்பை இந்தியன்ஸ் அணியை பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தார்கள். ஆனால் தற்போது அந்த அணியின் செயல்பாட்டை பார்த்தால், சூரியகுமார் அனைத்து திரும்பி வராமல் அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது என்பது போல் தெரிகிறது.
ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது எல்லாம் அணிக்குள் நிறைய பிளவுகளை உண்டாக்கியதோடு, வெளியில் ரசிகர்களிடமும் நிறைய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றி நிறைய எதிர்மறையான சூழல் நிலவுகிறது.
நேற்று தோல்விக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி கூட்டத்தில் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா “கடினமான வீரர்கள்தான் கடினமான சோதனைகளை அனுபவிக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் நாம் மிகவும் கடினமான அணி. நேற்று சேஸ் செய்யும் பொழுது அந்த டோட்டலுக்கு அருகில் வர முடிந்த ஒரே அணி நாம் மட்டும்தான்.
இதையும் படிங்க : ருதுராஜும் என்னை மாதிரிதான்.. ஆனா இந்த பையன் வேடிக்கையானவன் – தோனி ஓபன் பேட்டி
நமது அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். யாரும் சூழ்நிலையை பார்த்து பயந்து ஓடவில்லை. எல்லோரும் தங்கள் கையில் பந்து இருக்க வேண்டும் வீச வேண்டும் என்று விரும்பினார்கள். இது ஒரு நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். நாம் ஒருவருக்கு ஒருவர் உதவுவதை உறுதி செய்வோம். நல்லது கெட்டது எது நடந்தாலும் அதை நாம் ஒன்றாக சேர்ந்து சமாளிப்போம். எப்பொழுதும் ஒன்றாகவே இருப்போம்” என்று பேசியிருக்கிறார்.