இனிமேல் பொறுமை கிடையாது.. கரீபியன் லீக்கில் களமிறங்கும் சிஎஸ்கே இந்திய வீரர்!

0
525

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் இன் ராஜ்ஜியம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் கிரிக்கெட் முதன்மையான விளையாட்டாக விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன .

இந்த டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளால் அமெரிக்கா மற்றும் யுஏஇ போன்ற நாடுகளிலும் கிரிக்கெட் பிரபலம் அடைந்து வருகிறது . சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மேஜர்லி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டி தொடரில் ஐபிஎல் அணி நிர்வாகங்களை பல அணிகளை வாங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரும்பியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் சிபிஎல் கிரிக்கெட் தொடர் இன் 2023 ஆம் ஆண்டிற்கான சீசன் வருகின்ற 17ஆம் தேதி துவங்க இருக்கிறது. ஆறு அணிகள் பங்குபெறும் இந்த போட்டி தொடரில் மொத்தமாக 34 போட்டிகள் நடைபெற இருக்கிறது . ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் போன்ற போட்டி தொடர்களில் விளையாடும் உலகின் முன்னணி வீரர்கள் சிபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கு பெற்று வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியின் உன்னால் வீரரும் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமான அம்பட்டி ராயுடு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர் 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்ட டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தேர்வானார். ஆனால் பிசிசிஐ ஓய்வு பெற்ற வீரர்கள் கட்டாயமாக ஒரு வருடம் எந்த வெளிநாட்டு லீக் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என புதிய வரைமுறை வகுக்கப் போவதாக செய்திகள் வந்தன. இதனால் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அந்தத் தொடரில் இருந்து விலகினார் ராயுடு .

ஆனால் தற்போது வரை பிசிசிஐ இந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காததால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற இருக்கும் கரிமியன் பிரிமியர் லீக் போட்டிகளில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நிவிஸ் பேட்டரியோட அணிக்காக விளையாட தேர்வாகி இருக்கிறார். இந்தப் போட்டி தொடரில் இவர் பங்கு பெற்றால் கரீபியன் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு சுழற் பந்து வீச்சாளரான பிரவீன் தாம்பே கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கிறார். அவர் ட்ரின்பேங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 2020 ஆம் ஆண்டு சிபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது அம்பட்டி ராயுடு செய்யும் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்டரியாட்ஸ் அணிக்காக விளையாட தேர்வாகி இருக்கிறார் . இந்த அணிக்கு தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் வீரரான மலோலன் ரங்கராஜன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாடு பிரிமியர் லீக் உட்பட போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஎல் போட்டிகளில் அம்பட்டி ராயுடு மற்றும் பிரவீன் தாம்பே தவிர சன்னி சோகள் மற்றும் ஸ்மித் பட்டேல் ஆகிய ஒரு விளையாடி இருக்கின்றனர். ஆனால் இந்த இரண்டு வீரர்களும் அமெரிக்க குடியுரிமை பெற்றதால் அவர்கள் அமெரிக்க உள்நாட்டு வீரர்களாக இந்த போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.