ஜடேஜா அக்சர் மாதிரி என்னால பண்ண முடியாதா?.. பேட்டிங்க்ல பெருசா பண்ணிட்டு இருக்கேன் – தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பு பேட்டி!

0
794
Sai Kishore

தற்போதைய நவீன கிரிக்கெட் உலகில் ஒரு புதிய பழக்கம் உருவாகி வருகிறது. டி20 கிரிக்கெட் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆல் ரவுண்டர்களுக்கு பெரிய மதிப்பு உருவாகி இருக்கிறது.

இந்த ஆல்ரவுண்டர் விஷயத்தில் கட்டாயமாக விரல் சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கும் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று கட்டாய ஆல்ரவுண்டர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

- Advertisement -

அதாவது குல்தீப், சாகல் போன்ற மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அஸ்வின், ஜடேஜா போன்ற விரல் சுழல் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் பங்களிப்பு செய்யவேண்டிய கட்டாய நிலை இருக்கிறது.

இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக தற்பொழுது இந்திய அணிக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் விளையாடுகிறார்கள். மேலும் இந்தியாவின் இரண்டாவது அணியை அனுப்பும் பொழுது அந்த அணியில் இந்த இடத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் ஷாபாஷ் அகமத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இடது கை சுழற் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும். நல்ல பங்களிப்பை தரக்கூடிய தமிழகத்தின் சாய் கிஷோருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும் அவருக்கு அவரது ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் இந்த வருடம் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு முனையில் மிகவும் சிக்கனமான முறையிலும், அதே சமயத்தில் விக்கெட் வீழ்த்தக் கூடிய வகையிலும் திறமையான இடதுகை சுழற் பந்துவீச்சாளர். இந்த வருடம் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரில் சிறப்பாக பேட்டிங்கும் செய்திருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இவரிடம் இதுகுறித்து பேசும் பொழுது சாய் கிஷோர் கூறுகையில்
“நான் ரொம்ப நல்லா இருக்கேன். நான் கிரிக்கெட் ரசிக்கிறேன். நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சுவாரசியமான அனுபவமாக இருக்கிறது. நான் மிகவும் வேடிக்கையாக இருக்கிறேன் எடுத்துக் கொள்கிறேன். நாம் ஒரு போட்டியை யோசித்து தொடங்கும் பொழுது நம்முடைய மொத்த ஆற்றலும் அதற்குள் பாய்கிறது. அதனால் சில விஷயங்களுக்கு ஏன் எப்படி என்று விளக்கம் சொல்ல முடியாது.

ஆம் நான் நிச்சயமாக என்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வருகிறேன். எனது பேட்டிங்கையும் மேம்படுத்தி வருகிறேன். எனது மொத்த ஆட்டத்தை மேம்படுத்துவதில் நான் நீண்ட தூரம் வந்து விட்டேன். மேலும் மேம்படுத்திக் கொண்டே இருக்க விரும்புகிறேன். ஆல்ரவுண்டர் என்பது ஒரு டாக் மட்டும்தான். என்னால் அதைத் தாண்டி நன்றாக பேட்டிங் செய்ய முடியும். நான் எப்பொழுதும் பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். இப்பொழுது கூட தியோதர் டிராபி தொடரில் என்னுடைய பேட்டிங் அணிக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இப்பொழுது பந்துவீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று.

நீங்கள் ஒரு விரல் சுழற் பந்துவீச்சாளராக மேல்மட்ட அளவில் கிரிக்கெட் விளையாட விரும்பினால், நீங்கள் பேட்டிங்கும் செய்ய வேண்டும். ஆனால் முன்பு இப்படியான நிலை கிடையாது. இப்பொழுது இப்படித்தான் இருக்கிறது. ஆனால் நான் இதற்காக பேட்டிங் செய்யவில்லை. நான் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். எனவே நான் பேட்டிங்கில் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். நான் வாய்ப்புகள் குறித்து எந்த விரக்தியும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை!” என்று கூறியிருக்கிறார்!